ஒன்றரை வருடமாக கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்ட பெண்!

35 வயதான தன் மனைவியை சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கழிவறையிலேயே பூட்டி வைத்த நபர்.இவர் ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் இவர் பெயர் நரேஷ் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரை மாவட்ட மகளிர் மற்றும் குழந்தை நல துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்த பெண்ணுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.தற்போது அவர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். 

பெண் கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரிந்தவுடன் அந்த மாவட்டத்தைச் சார்ந்த மகளிர் பாதுகாப்பு அலுவலர் ரஜினி குப்தா சம்பவ இடத்திற்கு விரைவாக சென்றார். 

 அவர் அந்த பெண்ணை பார்க்கும் பொழுது மிகவும் மோசமான நிலையில் ஒரு சிறிய கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்று கூறுகிறார். மேலும் அவர் உடல் மெலிந்து நடக்க கூட முடியாமல் இருந்தார் என்றும் பசியின் கொடுமையில் இருந்த அவருக்கு ரஜினி குப்தா உணவளித்தபோது,பசியில் 8 சப்பாத்திகளை உண்டார் என்று தெரிவித்துள்ளார். 

அந்த பெண்ணின் கணவர் நரேஷ் என்பவரை விசாரிக்கும் பொழுது அவர் மனைவிக்கு மனதளவில் சிக்கல் இருப்பதால் பூட்டி வைத்திருந்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் அந்த பெண் நல்ல மனநிலைமையுடன் இயல்பாக உள்ளார் என்று கூறுகிறார்கள். நரேஷ் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil.