தெலுங்கானாவில் கனமழை. இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள். மனதை உருக்கும் வீடியோ


ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக ஏராளமான  மக்களின் தங்களது இயல்பு வாழ்க்கை இழந்து தவிக்கின்றனர். மேலும் ஐதராபாத்தில் இரண்டு இடங்களில் பெய்துவரும் தொடர்மழையால் இதுவரை 11 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கனமழை காரணமாக ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம், தம்மாய்குடா, அட்டப்பூர் மெயின் ரோடு, முஷீராபாத் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தன. மேலும் ரெங்காரெட்டிபுரம் மாவட்டத்தில், கந்தேஷ்நகர், சாய்நாத் காலணி, ஹக்கிம்பாத், பேங்க் காலனி, அகமய நகர் பகுதிககளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. கடுமையாக பாதிக்கப்பட்ட டோலி சவுக்கி பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.