ஒரே துப்பாக்கி சூட்டால் கேள்விக்குறியான 9 பேரின் நிலைமை !! துயரத்தில் குடும்பம்..
நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்த ஹீனா தேவி சற்று நின்று இளைப்பாறியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா என்ற கிராமத்தில் சுதிர் சிங்க் என்பவரது மகளுக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கிராம தலைவரின் வீட்டு விசேஷம் என்பதால் 2000க்கும் மேற்பட்டவர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். மணபெண்ணின் தந்தையான சுதிர் சிங் மற்றும் அஜித் சிங்க் ஆகியோர் பெண் நடன கலைஞர்களை மேடையில் இடைவிடாமல் ஆட வற்புறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்ததால் களைப்படைந்த ஹீனா தேவி என்ற இளம்பெண் சற்று நின்றுகொண்டே இளைப்பாறினார். அப்போது பாடலுக்கு நிக்காமல் நடனமாடுமாறு மிரட்டிய சுதிர் சிங், துப்பாக்கியை எடுத்து மேல்நோக்கி சுட்டு பயமுறுத்தியிருக்கிறார்.
அப்போது அஜித் சிங்கும் தன் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். அது ஹீனாவின் தாடையில் தாக்கியுள்ளது. இதில் அவருடைய கீழ்த்தாடை முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இவருடன் முகேஷ் மற்றும் கமல் என்ற மேலும் இருவரும் அந்த துப்பாக்கி சூட்டால் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அஜித் சிங் மற்றும் சுதிர் சிங் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மூவரில் ஹீனாவின் நிலை தான் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஹீமா தேவியின் சிதைந்த தாடை தற்காலிகமாக தைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவருக்கு செயற்கையாக புதிய தாடையைப் பொறுத்த வேண்டும் எனவும் அதற்கு சிக்கலான அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும் எனவும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 13 லட்சம் ரூபாய் தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
“சம்பவர் நடைபெற்ற நம்பவர் 30ஆம் தேதி உங்களுக்கு உடனடியாக உதவ ஒருவரும் தயாராக இல்லை. துப்பாக்கியால் சுடப்பட்டவுடன் ஹீனாவை 80 கி.மீ. தொலைவில் உள்ள அலகாபாத் அரசு மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றோம். டிசம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஒரு மருத்துவரும் இல்லை. இதனால், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம்.” என துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த ராதா தெரிவிதுள்ளார்.
ஹீனாவுக்கு புரன் லால் என்றபவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில்தான் திருமணம் நடந்திருக்கிறது. திருமணமானதும் கணவர் குடும்பத்தின் தொழிலான விசேஷங்களில் நடனமாடும் தொழிலில் தானும் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார். 9 பேர் கொண்ட அந்தக் குடும்பத்தில் மிகவும் அழகான தோற்றம் உடையவர் இவர்தான் என்பதால், இவருக்காகவே நிறைய பேர் தங்களை நிகழ்ச்சிகளை நடத்த அழைக்க ஆரம்பித்தாக ஹீனாவின் மாமியார் விமலா தேவி தெரிவிக்கிறார்.
குடும்பத்தில் அதிகம் படித்தவரான புரன் லால் பி.எஸ்சி. முடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை. இச்சூழலில் குடும்பத்தின் வருமானத்துக்கு ஓரே ஆதாரமாக இருந்தவர் ஹீனாதான். அவர் அனைவரிடமும் அன்புடன் நடந்துகொண்டதாகவும் மற்றவர்கள் மருத்துவச் செலவு உட்பட எல்லா தேவைகளையும் பரிவுடன் கவனித்துக்கொண்டார் எனவும் கூறும் புரன் லால் இப்போது அவரது மருத்துவச் செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகக் கவலை தெரிவிக்கிறார்.
மேலும், “ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு எங்கள் ஒன்பது பேரையும் கொன்றுவிட்டது” என்று ஆதங்கத்துடன் சொல்கிறார் விமலா.
படுத்த படுக்கையாக இருக்கும் ஹீனாவால் எதுவும் பேச முடியாது. சைகைகளால் தன் தேவைகளைச் சொல்ல முயல்கிறார். அவரது உடல் உபாதைகளை புரன் லாலும் ஹீனாவின் சகோதாரும் சுத்தம் செய்து பார்த்துக்கொள்கின்றனர். டிசம்பர் 25ஆம் தேதி லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மீண்டும் ஹீனாவை அழைத்துச்செல்ல வேண்டும். அதற்குக்கூட போதிய பணம் இல்லை என்கிறார் புரன் லால். “எங்களிடம் இருந்த அனைத்து விலைமதிப்புள்ள பொருட்களையும் விற்று 6.5 லட்சம் திரட்டிவிட்டோம். இனிமேல் யாரிடம் போய் கேட்பது என்று தெரியவில்லை. யாராவது எங்களுக்கு உதவ வேண்டும்.” என்று கூறுகிறார் புரன் லால்.