இயக்குநர் பாலாவுக்கு 'விசித்திரன்' படத்தலைப்பு விவகாரம் !
மலையாளப் படமான 'ஜோசப்' 2018ஆம் ஆண்டு வெளியானது.எம்.பத்மகுமார் இத்திரைப்படத்தினை இயக்கினார்.இந்த படத்தில் 'ஜோஜு ஜார்ஜ்,திலீஷ் போத்தன்,மாளவிகா மேனன்,அத்மியா ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் 'விசித்திரன்' என்கிற பெயரில்,ஜோசப் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கி இருக்கிறார்.தமிழில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்திருக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.அவர் 2015ஆம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்திருக்கிறார்.இந்நிலையில் ‘விசித்திரன்’ என்ற அதே தலைப்பை பயன்படுத்தி ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும்,இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் திரைப்படம் தயாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், “நான் சி.எஸ்.கே புரொடக்சன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றேன்.மேலும் 2015ஆம் ஆண்டு விசித்திரன் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தேன்.இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்துள்ளேன்.இந்தப் பதிவை அவ்வப்போது புதுப்பித்து வருவதால் மார்ச் மாதம் வரை இந்த தலைப்பு எனக்கு உரிமையானதாகும்.இந்த தலைப்பைப் பதிவு செய்வதற்கு முன் யாராவது இந்த தலைப்பை பதிவு செய்துள்ளார்களா என்பது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலிடம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டு விசாரணை நடத்தி உறுதி செய்தது.அதன் பின்னரே இந்த தலைப்பை எனக்கு தந்தது.
இந்நிலையில் விசித்திரன் என்கிற தலைப்பைப் பயன்படுத்தி பி ஸ்டூடியோ நிறுவனர் பாலா பெரியசாமி ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். இதன் இணை தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ்,கதாநாயகனாக நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின் விளம்பரம் யூடியூப்பில் அண்மையில் வெளியானது.எனவே எனக்கு சொந்தமான விசித்திரன் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கு 14ஆவது மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.வி.கிரிதர் ஆஜராகி வாதிட்டார்.அதன்பின் வழக்கை விசாரித்த நீதிமன்றம்,வழக்கு குறித்து 'பி ஸ்டுடியோ' நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி,வழக்கை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கின்றனர்
Tags: latest news | celebrity news | director updates | famous updates | recent updates | popular updates | trending topics | interesting news in tamil | tamil cinema updates |