ஆரஞ்சு பழத் தோலில் டோனர் கூட பண்ணலாமா?
டோனர்:
சருமத்திற்கு பாதுகாப்பு கவசம்தான் டோனர் என்று கூட சொல்லலாம். இதை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை அளவும் நீர்ச்சத்தின் அளவு பாதுகாக்கப்படுகிறது. இதனால் சருமத்தில் வறட்சி இல்லாமல் பொலிவாக இருக்கும். நம்முடைய முகத்தில் இயற்கையாகவே நீர் சத்து இருக்கிறது. முகத்துக்கு பராமரிப்பு செய்யும் போது கிளன்சிங் செய்யும் போதும் இந்த ஈரப்பதம் குறையும். இதை தக்க வைக்கவே டோனர் செய்கிறோம் சருமத்தை சுத்தம் செய்யும் போது சருமத்தின் துவாரங்கள் திறந்து இருக்கும் இதை இறுக செய்வதற்காகத்தான் டோனர் பயன்படுத்தவில்லை எனில் சருமத் துவாரங்களில் அழுக்குகள் அடைந்து பருக்கள் அதிகரிக்கும்.
டோனர் எதற்கு?
டோனர் 3 வகையான டோனர்கள் உள்ளது. ஒன்று ஆல்கஹால் கலந்து இருக்கும், மற்றொன்று கிளிசரின் கலந்து இருக்கும், மூன்றாவதாக தண்ணீருடன் கலந்து இயற்கையான பொருளால் செய்யப்படும் டோனர். இது மூலிகைப் பொருட்களைக் கொண்டும் செய்யப்படும். பழங்களில் தோளிலிருந்து டோனர் பயன்படுத்தலாம். இதை தயாரிப்பது மிக எளிது என்பதால் அவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தயாரிக்கலாம். முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கவும் டோனரை பயன்படுத்தி சரும துவாரங்களை மூடிவிட்டால் முகம் புத்துணர்ச்சியாக இருக்கும். ஆரஞ்சு பழத் தோலில் இருந்து தயாரிக்கப்பட்டும் டோனரை தயாரிக்கும் முறையையும் பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தோல்:
இந்த ஆரஞ்சு பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் டோனர் ஆனது கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். சரும துவாரங்கள் பெரிதாக திறந்து இருக்கும் போதெல்லாம் அதை நன்றாக இருக்க இந்த டோனர் நிச்சயமாகப் பயனளிக்கும். இதை அதிகமாக பயன்படுத்த முடியாது. ஒரு வாரம் வரை வைத்திருந்து மட்டும்தான் இதை பயன்படுத்த முடியும். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழத் தோலையும் பயன்படுத்தலாம். ஆனால் எலுமிச்சை சருமத்தின் இறந்த செல்களை நீக்கவும், முகத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்றும். ஆனால் ஆரஞ்சு முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும். முகம் சோர்வடைந்து கருமை படர்ந்து இருந்தால், அதை நீக்கி அழகிய நிறத்தையும் கொடுக்கும்.
டோனர் தயாரிக்கும் முறை:
ஆரஞ்சு பழத்தோல் - இரண்டு
புதினா இலைகள் - 10
தண்ணீர் - டம்ளர்
ஆரஞ்சு பழத் தோலில் இருந்து நாரை உரித்து சுத்தமாக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கழுவி சுத்தமாக்கிக் கொள்ள ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆரஞ்சு பழத் தோலையும் புதினா இலைகளையும் சேர்த்து பாத்திரத்தை மூடி விடுங்கள். 8 மணி நேரம் ஊற விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள் தினமும் செய்யும்போது இதை பயன்படுத்தலாம் தேவையெனில் இதனுடன் 10 சொட்டு கிளிசரின் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் காலை, இரவு முகத்திற்கு பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முகம் என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவில் நிறமும் அழகும் பிரகாசமாக இருக்கும்.
டோனரின் நன்மை என்ன:
ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ள தான். முகத்திற்கு மினுமினுப்பைத் தருகிறது. சருமத்தின் துவாரங்கள் இருக்கும் அழுக்கையும் வெளியேற்றுகிறது. துவாரத்தை இறுக்கவும் செய்கிறது. சருமத்தை பாதுகாக்க செய்கிறது .புதினா இலைகள் சருமத்தை வறட்சி நீக்கி சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்கிறது. சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பதோடு புத்துணர்ச்சி ஆகவும் இருக்கிறது. சருமத்தில் அழுக்குகள் வெளியேற்றியது அவை இயல்பாக மூடிவிடும். ஆனால் கிராமங்களில் தூசு கிருமிகள் உடனே செல்ல அதிகம் வாய்ப்பு உண்டு. அதனால் தான் முகத்திற்கு சரும துவாரங்களை ஆரோக்கியமாக மூடிக் கொள்ளும் வகையில் டோனர் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil