ஃபேஸ் ஷீட் மாஸ்க் அனைவரும் பயன்படுத்தலாமா?

முகத்திற்கு ஃபேஸ் பேக் என்பது மிகவும் முக்கியமானது.  இயற்கை பொருட்களை எப்படி எதனோடு பயன்படுத்தவேண்டும் என்று ஒவ்வொன்றையும் கொஞ்சம் கவனித்து தான் செய்ய வேண்டும். அவர்களுக்கு என்று சிறப்பாக உதவும் வகையில் கடைகளில் ஃபேஸ் மாஸ்க்  ஷீட் கிடைக்கிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் பலவகைகளில்  கிடைக்கிறது. பண்டிகை காலங்களில் உடனடியாக உங்களின் அழகும் மேம்படுத்த உதவும். அப்படி விதவிதமான ஃபேஸ் மாஸ்க் குறித்து தான் நாம் பார்க்கப் போகிறோம்.

தக்காளி ஷீட்  ஃபேஸ் மாஸ்க்: 

வீட்டில் தக்காளியை பயன்படுத்தி எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று நாம் பார்த்திருப்போம். ஆனால் தக்காளியை வைத்து தயாரிக்கும் ஃபேஸ் மாஸ்க் ஷீட் கடைகளிலும் கிடைக்கிறது. தக்காளியில் அமினோ அமிலங்கள், வைட்டமின் சி, வைட்டமின் இ, லைகோபின் பல வகை சத்துக்கள் உள்ளது. இது முகத்தில் இருக்கும் நெற்றி சுருக்கங்களையும், நீக்கும் தன்மை கொண்டது. சருமத்தை இயற்கையாக வைத்து சுத்தம் செய்யக்கூடியது. சருமத்தை ஈரப்பதத்துடன் துணை புரிபவை. உங்கள் சருமம் மிகவும் மந்தமாகவும், சோர்வாகவும் கரையிலிருந்து பாதுகாக்கிறது. நீங்கள் தக்காளி ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். உடனடி புத்துணர்ச்சி கொடுக்க இவை உதவும். எந்த காரணமாக இருந்தாலும் இந்த தக்காளி ஃபேஸ் மாஸ்க் ஷீட் பயன்படுத்தலாம்.



ரைஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க் ஷீட்: 

சருமத்தில் பிரச்சனை இருப்பவர்கள் ரைஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். அரிசி மாவும், அரிசி கழுவிய நீரும் தரும் அழகு குறிப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது வரும் பண்டிகை காலங்களில் இதற்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாது என்பவர்கள்  ரைஸ் வாட்டர் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். இது முகத்தில் இருக்கும் கருமையான நிறத்தை மறைக்கவும் செய்கிறது. சருமத்தின் மூன்றாவது அடுக்கில் சென்று சருமத்தை சுத்தம் செய்து இருக்கமாக வைத்துக் கொள்கிறது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கிறது. இதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எல்லோரும் பயன்படுத்தலாம். சரும பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு ஏற்ற நல்ல ஃபேஸ் மாஸ்க்  ஷீட் இது.

ப்ளூ பெர்ரி ஃபேஸ் மாஸ்க் ஷீட்:

பொதுவாக வரட்சியான சருமம் இருப்பவர்கள் பழங்களைக் கொண்டு அழகு பராமரிப்பில் ஈடுபடும்போது ப்ளூபெர்ரி தேர்வு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது வறண்ட சருமத்தில் முகப்பருவும் சேர்ந்த கொண்டிருப்பவர்களுக்கும் நன்மை தரக்கூடியது.  ஸ்கைலைட்ஸ் என்னும் பொருள் அழகு  தயாரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது சரும திசுக்களின் ஆரோக்கியம் காக்கிறது. 

இந்த ப்ளூபெர்ரி என்ஸ் கொண்டு தயாரிக்கப்படும்  மாஸ்க் சருமத்தை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகிறது. வறண்ட சருமம் இருப்பவர்கள் போன்று எண்ணெய் பசை அதிகம் கொண்டிருப்பவர்களும் இதை பயன்படுத்தினால் நல்ல பலன் தரும். சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை குறைக்க செய்கிறது. இது எல்லா வயதினரும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் ஷீட்:

எலுமிச்சை பழத்தை கூந்தல் மற்றும் சருமம் இரண்டுக்குமே பயன்படுத்துகிறோம். சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்தும் போது அது சிலருடைய சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கும் என்பதால் எலுமிச்சை சாற்றுடன் சம அளவு நீர் கலந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் ஷீட் சருமத்திற்கு எரிச்சல் தராது. மாறாக சருமம் வறண்டு இருந்தால் ஈரப்பதத்தை கொடுக்கும். எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் ஷீட் பளிச்சென்று கொடுக்க உதவும். வறண்ட சருமத்தினர் இதை பயன்படுத்தலாம். முகத்தை பளபளப்பாக ஜொலிக்க வைக்க எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் சீட் உதவுகிறது. இதை பயன்படுத்திய பிறகு உங்கள் சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் நீங்கள் பார்க்கலாம்.


ஆலிவ் ஃபேஸ் மாஸ்க் ஷீட்: 

தினமும் இரவு தூங்கும் போது மேக்கப் கலைத்த பிறகு முகத்திற்கு ஆலிவ் ஆயில் மசாஜ் செய்து படுத்தால் நல்லது. சருமத்தை மிருதுவாக வைத்திருக்கக்கூடிய ஆலிவ் ஆயிலில் தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் மாஸ்க் வறண்ட சருமத்தினருக்கு மிகவும் ஏற்றதாகும். இந்த ஃபேஸ் மாஸ்க் ஷீட்டை பயன்படுத்தி பிறகு மசாஜ்  செய்தால் பலன் கிடைக்கும் சருமத்தின் பல அடுக்குகள் இருக்கின்றன. சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி வறட்சியை போக்க கூடியது.

ஃபேஸ் மாஸ்க் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை: 

இன்னும் பல வகையான பழங்கள், காய்கறிகள் என்று இயற்கை பொருட்களை கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதை தேர்வு செய்யும்போது மாஸ்க் ஷீட்  பருத்தி பதப்படுத்தி பிறகு எஞ்சி இருக்கும் மைக்ரோ பைபர் என்று குறிப்பிட்டிருக்கும். நீங்கள் தேர்வு செய்து தரமானதாக பயன்படுத்துங்கள். பொதுவாக ஃபேஸ் மாஸ்க் ஷீட் எப்போது பயன்படுத்தலாம் என்றால் பண்டிகை காலங்களிலும் எல்லா காலங்களிலும் உடனடியாக அளிக்க விரும்பினால் மட்டுமே தேர்வு செய்யுங்கள். ஏனெனில் இது உடனடியாக பலன் கிடைக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil