Jio Tv ஐ இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் பார்த்து ரசிக்கலாம்...... எப்படித் தெரியுமா?

அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு பொதுவான பொழுதுபோக்கு நன்மை என்றால் அது ஜியோ பயனர்களுக்குக் கிடைக்கும் ஜியோ டிவி நன்மை தான். ஜியோ கொடுக்கும் மலிவான அதிகளவு டேட்டாவை இப்படியும் பலர் தீர்த்து வருகின்றனர். ஏராளமான திரைப்படங்களும், பொழுதுபோக்கு அம்சமும் ஜியோ டிவி தளத்தில் நிறைந்திருக்கிறது.    பெரிய திரையில் பயன்படுத்த கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

கம்ப்யூட்டரிலும் , லேப்டாப்பிலும் Jio Tv:

  உங்களின் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்களில் நீங்கள் Jio Tv ஐ பயன்படுத்த  முதலில் ஒரு ஆண்ட்ராய்டு தளத்தை உங்கள் கணினியில் உருவாக்க வேண்டும். போச்சுடா, பெரிய தலைவலி புடுச்ச வேலையா இருக்கும் போலயே? என்று இதைப் படித்தவுடன் நினைக்காதீர்கள். உங்கள் கம்ப்யூட்டர்  அல்லது லேப்டாப்டில் ஆண்ட்ராய்டு தளத்தை உருவாக்குவது என்பது நீங்கள் மெசேஜ் செய்வதை விட மிகவும் எளிமையானதாக இருக்கும்.

 

ஆண்ட்ராய்டு எமுலேட்டர் (Android Emulator):

Android Emulator என்ற ஆப் மூலம் நீங்கள் கடினமான வேலை என்று நினைக்கும் வேலையை  கூட மிகவும் எளிமையாக முடித்துவிடும். உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் Bluestacks மற்றும் Nox App Player ஆகிய இரண்டு ஆப்களும் எளிதாக ஆண்ட்ராய்டு தளத்தை உருவாக்க உதவும். உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி ஆப்ஸ்களை பயன்படுத்துவீர்களோ, அப்படி நீங்கள் இந்த ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

 

Jio Tv-ஐ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் எப்படி இன்ஸ்டால் செய்வது?

 முதலில் உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒன்றை ஆண்ட்ராய்டு எமுலேட்டர் ஆப்ஸ்களில் பதிவிறக்கம் செய்யுங்கள். அதை சரியாக இன்ஸ்டால் செய்து, ஓபன் செய்யுங்கள். முக்கிய குறிப்பு ஆப் இன்ஸ்டால் செய்யும் பொது உங்கள் சாதனத்தின் OS-க்கு ஏற்றார் போல் உள்ள வெர்ஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.

உங்களின் ஜியோ ஐடி மற்றும் பாஸ்வோடு விபரங்களை இப்போது உள்ளிடுங்கள். Jio Tv ஆப்ஸை உங்கள் ஸ்மார்ட்போனில் பார்ப்பது போன்ற  திரையில் காண்பீர்கள். முழு திரைக்கு இப்போது, Wide என்ற விருப்பத்தை கிளிக் செய்து  Jio Tv-ஐ பார்த்து மகிழுங்கள்.

 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: tamil tv channel | Jiotv  | Jio tv Tamil | Jio tv for pc In Tamil | Jio tv app download | Jio tv channel | how to install jio tv in computer(or ) laptop | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil