நாட்டுக் கோழி முட்டையையும், வெங்காயத்தையும் பயன்படுத்தினால் பொடுகு போய்விடும். உங்களுக்கு தெரியுமா?
கூந்தல் வளர்ச்சியில் பொடுகு என்பது மிகவும் தவிர்க்க முடியாததுதான். பொடுகு என்பது இயற்கையாகவே வரக் கூடியது என்றாலும் சரியான முறையில் கூந்தலை பராமரித்தால் மட்டுமே அது தானாக சரியாகிவிடும். இல்லை என்றால் பொடுகு மீண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அவ்வப்போது எட்டிப் பார்ப்பதும், பிறகு குறைவதும் இயல்பானதுதான். ஆனால் எல்லாக் காலங்களிலும் பொடுகு கூந்தலில் ஒட்டி இருந்தால் அது கூந்தலின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கக் கூடும். பொடுகை போக்க பலவிதமான குறிப்புகள் இருக்கும். பாட்டிகளின் வைத்தியமுறை இது என்பதால் பலனையும் வேகமாக பெறலாம் . இந்த வைத்திய முறையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முட்டையும் வெங்காயமும்:
சாம்பார் வெங்காயம் - 10
நாட்டுக் கோழியின் முட்டை வெள்ளைக்கரு - 1
வெங்காயத்தின் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து அதனுடைய சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும். இரண்டையும் நன்றாக கலந்து நுரைத்து வரும் அளவுக்கு கலக்கவும். மிக்ஸியில் அடித்து நுறைக்க வரும்வரை எடுக்கவும். இது ஷாம்பு போன்று இருக்கும். இதை கூந்தலில் தேய்க்க வேண்டும்.
பொடுகு பேக்:
கூந்தலை சிக்கலில்லாமல் சீவி வையுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை பயன்படுத்தலாம். தலை முடியை ஒரு பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். மயிர் கால்களுக்கு நன்றாக தடவி விடுங்கள். கூந்தலின் மேலும் தடவலாம். நாட்டுக்கோழி முட்டை அதிகமாக வாடையை உண்டாக்கும் என்பதால் இதை தலையில் தேய்த்து கையோடு ஹேர் கவர் போட்டு விடவும். இது எவ்வளவுக்கெவ்வளவு காய விடுகிறோமோ அவ்வளவு நல்லது. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சூடான நீரில் குளிக்க வேண்டும்.
பொடுகு போக சீயக்காய் பயன்படுத்துங்கள்:
தலை குளித்ததும் தலையை நன்றாக உலர்த்தி, குனிந்தபடி முதலில் வெதுவெதுப்பான நீரில் அலசிக் கொள்ளுங்கள். ஷாம்பூவுக்கு பதிலாக சீயக்காய் பயன்படுத்துவது வேகமாக பலனளிக்கும். சீயக்காய் அரப்பு போன்று இருப்பதால் கூந்தல் சுத்தம் செய்ய உதவும். இந்த அழகு பொருள் கூந்தலுக்கு வளர்ச்சியை கெடுக்கும் என நினைக்க வேண்டாம். சீயக்காய் கூந்தலில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்குவதால் பொடுகு மீண்டும் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது. தலையிலிருக்கும் அழுக்கு, பூஞ்சைகளை நீக்கும் தன்மை கொண்டது சீயக்காய். நீங்கள் பொடுகுக்கு செய்யும் பராமரிப்புக்கு சீயக்காய் தான் பலன்களைத் தரும்.
வெங்காயத்தின் சாரும் நாட்டுக்கோழி முட்டையும் பயன்படுத்தும்போது பொடுகை நிரந்தரமாக போகும். ஆனால் சரியான முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். அதிகம் இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் உதவக் கூடியது என்பதால் இயற்கையை விரும்புவர்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். பொடுகு போகும் வரை இந்த பேக் மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது. வேறு எதையும் நீங்கள் பயன்படுத்த வேண்டாம். இடையில் வேறு எந்த ஷாம்புவும் பயன்படுத்தக் கூடாது. தலை சீவ பயன்படுத்தும்போது சீப்பு சுத்தமானதாக இருக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் மட்டும் இப்படி செய்து வந்தால் பொடுகு நிரந்தரமாகப் போய்விடும். கூடுதலாக கூந்தல் மயிர்கால்களுக்கு நல்ல ஊட்டச்சத்தும் வளர்ச்சியின் கிடைத்துவிடும். கூந்தல் மிகவும் பொலிவாகவும் இருக்கும்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil