வட்டியில்லாமல் பணமா?..இது சூப்பர் சலுகையாச்சே....!!

 கிரெடிட் கார்டு என்றாலே பயந்து ஒதுங்குபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். ஏனென்றால்  கிரெடிட் கார்டை சரியாக  பயன்படுத்தாவிட்டால்,மிகவும்  மோசமான கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளவோம் என்ற பயம் தான். நீங்கள் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை கிரெடிட் கார்டு, மூலமாக எடுக்க முடியும். ஆனால் அதற்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. மேலும்  கிரெடிட் கார்டில் நீங்கள் பணத்தை எடுத்த நேரத்திலிருந்து வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது என்பது  கவனிக்கதக்க விஷயமாகும். 3.5 சதவீதம் வரையில் கூட நீங்கள் ஏடிஎம் மூலமாக எடுத்த பணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் தான் ஏடிஎம்மில் கிரெடிட் கார்டுகளை வைத்து பெரும்பாலும் பணம் எடுப்பதில்லை.

 

ஐடிஎஃப்சி வங்கியில் வட்டி இல்லாமல் பணம்:

 ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி, தனது கிரெடிட் கார்டு வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக,  கிரெடிட் கார்டிலும் பல வகையான சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக 48 நாட்களுக்கு வட்டியில்லாமல் முன் கூட்டியே பணம் எடுத்துக் கொள்ளலாம். ஐடிஎஃப்சி வங்கியின் தலைமை இயக்க அதிகாரி பி மதிவானன் கிரெடிட் கார்டில் இவ்வாறு வட்டியில்லா பணம் எடுத்துக் கொள்ளும் வசதியானது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுள்ளதாக கூறியுள்ளார்.

பணம் எடுக்கும் விகிதம் குறைவு :

இப்படி முன் கூட்டியே, தற்போதைய காலகட்டங்களில், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்ககாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பணம் எடுக்கும் விகிதம் மிக குறைவாக உள்ளது. எடுத்துக்காட்டாக கடந்த நவம்பரில்  கிரெடிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து, வெறும் 231.3 கோடி ரூபாய் பணத்தினை எடுத்துள்ளனர். இதே காலகட்டத்தில்  62,349.7 கோடி ரூபாய் விற்பனை மையங்களில் செலவிட்டுள்ளனர்.

கட்டணம் எவ்வளவு?

  தற்போது கிரெடிட் கார்டு மூலம் வங்கிகள் ஒவ்வொரு முறையும் பணம் எடுப்பதற்கும், 250 - 450 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கின்றன. அதோடு பணம் எடுக்கும் நாளில் இருந்து, பணத்தினை திரும்ப செலுத்தும் நாள் வரை வட்டி விகிதம் மாதாத்திற்கு 2.5 - 3.5 சதவீதம் வரை,  வசூலிக்கின்றன. ஆனால் ஐடிஎஃப்சியில் POP உபயோகப்படுத்தும் போது, கிடைக்கும் வட்டியில்லா காலத்தினை போல, வட்டியில்லா கால அவகாசத்தினை பணம் எடுத்தாலும்  பெற முடியும்.

 

குறைந்த கட்டணம் மட்டும் தான்:

 ஐடிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு தற்போது இந்த சேவையை  அழைப்பிதழ் மூலம் விரிவுபடுத்தி வரும் நிலையில்,  மற்ற வாடிக்கையாளர்களுக்கும் மார்ச் மாதத்திற்கு பிறகு விரிவுபடுத்தும் என்றும் இவ்வங்கி கூறியுள்ளது. அதோடு இவ்வங்கி தெரிவித்தது என்னவென்றால் இவ்வாறு பரிவர்த்தனை செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கு  கட்டணம் ரூபாய் 250  மட்டுமே  வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு இருந்தாலும் இந்த திட்டத்தினை  தற்போது சோதனைக்காக  அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதனை பொறுத்து தான் , அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என்றும் கூறப்பட்டுள்ளது.

 

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டம்:

ஐடிஎஃப்சியின் இந்த திட்டம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. மற்ற வங்கிகளில் 36 - 40% என்ற விகிதத்தில் வட்டி விகிதம் இருக்கும் நிலையில், ஐடிஎஃப்சியில் 9 - 36% இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: personal finance | idfc first bank |  offer interest free cash on credit card | no interest | super offer in hdfc bank | upcoming news | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil