கருப்பாக இருக்கும் உதடை சிவப்பாக மாற்றலாம்...

கருப்பாக இருக்கும் உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றுமில்லை. எளிதாகவே நம்முடைய உதட்டின் நிறத்தை மாற்றலாம். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து நாம் தினமும் பராமரித்து வந்தால் சீக்கிரமாக அழகான உதடுகளை பெற்றுவிடலாம். இளம் வயதில் இருப்பவர்கள் சீக்கிரமாகவே இந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.  புகைப்பிடிக்கும் பழக்கம், மோசமான உணவு பழக்கங்கள் போன்றவை எல்லாமே தான் உதட்டின் மீது பிரதிபலிக்கச் செய்கிறது. எனவே இதற்கான காரணங்களை ஆராய்வதை காட்டிலும் எப்படி வீட்டு வைத்தியத்தை வைத்து அதை திரும்பப் பெறலாம் என்று பாருங்கள்.

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரியை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அதனுடைய நிறமும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகானது. ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் கலந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.  தினமும் இரவு தூங்கும் முன் இந்த கலவையை உதட்டின் மீது தடவி வந்தால் வெகு விரைவில் உதட்டின் நிறம் மாறிவிடும்.


பாலும் மஞ்சளும்: 

காய்ச்சாத பால் உடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை கருப்பான உதட்டின் மீது தடவி பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். வாரத்திற்கு மூன்று நாட்களாவது இந்த பேக் பயன்படுத்தினால் உதட்டின் நிறம் மாறி இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். மஞ்சள் உதட்டு சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சுத்தம் செய்கிறது.

எலுமிச்சை சாறு: 

எலுமிச்சையில் சிட்ரஸ் என்ற அமிலம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு சில சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை நீர் அல்லது எண்ணெயுடன் சம அளவு எடுத்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும். இதை உதட்டின் மேல் தடவி நன்றாக உலர விடுங்கள். பிறகு சிறிது நேரம் கழித்து  நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.  இயற்கையாக சுத்தப்படுத்துவதால்  இது கரை படிந்த உதடுகளில் மென்மையாக மாற்றுகிறது. ஆலிவ் எண்ணெய் ஈரப்பதமாக வைக்கவும் உதவும்.


வைட்டமின் இ:

வைட்டமின்  சருமத்திற்கு செய்யும் நன்மைகள் தெரிந்திருக்கும். இது உதட்டின் நிறத்தை நன்றாக மாற்றும். உதடுகளை மென்மையாகவும் மாற்றக்கூடியது. வைட்டமின்-ஏ சருமத்திற்கு அற்புதமான பலனை அளிக்கிறது. இதை உதடுகள் சோர்வாக இருக்கும் போதெல்லாம் தொடர்ந்து தடவி வந்தால் உதடுகளுக்கு நல்ல ஈரத்தன்மை கிடைக்கும். இதை வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டும். 

காய்கறிச் சாறு:

கேரட் மற்றும் பீட்ரூட் வீட்டில் இருக்கும் போதெல்லாம் அதன் மேல் உள்ள தோலை நீக்கி அதை சிறு துண்டாக வெட்டி அதனை எடுத்து அதனுடைய சாறை  உதட்டின் மீது தடவி வருவதால் உதட்டின் நிறம் மேம்படும். நேரம் இருக்கும்போதெல்லாம் கேரட் மற்றும் பீட்ரூட் துண்டை மசித்து அதை விழுதாக்கி உதட்டின் மீது தடவி வரலாம். செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே உதட்டிற்கு நிறத்தை அளிக்கக் கூடியவை ஆகும். சிவப்பான நிறத்தை உதட்டுக்கு அளிக்கக் கூடியது.

ஆரஞ்சு பவுடர்:

ஆரஞ்சு பழத்தில் உள்ள தோலை எடுத்து அதனை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை சருமம், கூந்தல் என அனைத்துக்குமே நன்மை தரக் கூடியதாகும். உதட்டின் நிறத்தை கூட்டுவதற்கும் ஆரஞ்சு பொடியைக் கொண்டு உதட்டின் நிறத்தை மீட்கலாம். ஆரஞ்சு பொடியுடன், காய்ச்சாத பாலை சேர்த்துக் குழைத்து அதை உதட்டின் மீது தடவி பேக் போடும் போது ஒரு பத்து நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி எடுங்கள். இப்படி தினமும் இதை செய்வதன் மூலம் உதடுகள் மிகவும் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.

மாதுளை விதைகள்:

முகத்தில் உள்ள அழுக்கை வெளியேற்ற உதட்டிற்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். மாதுளை விதைகளை கொண்டு ஸ்க்ரப் செய்யலாம். அப்படி செய்வதால் உதட்டின் அழுக்கை நீக்குவதோடு, அது அதிகமான நிறத்தையும் உதட்டுக்கு கொடுக்கிறது. க்ரீமி பாலுடன், மாதுளை விதையை சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். உதட்டில் மேல் பயன்படுத்துவதற்கு முன்பு, ரோஸ் வாட்டர் விட்டு சேர்த்து உதட்டின் மேல் ஸ்க்ரப் போன்ற சில நிமிடங்கள் செய்து கொள்ளுங்கள். பிறகு 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள்.


உருளைக்கிழங்கு:

கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையத்திற்கு உருளைக்கிழங்கு சாறு உதவுவது போல, உதட்டின் கருமையைப் போக்குவதற்கு உருளைக்கிழங்கு சாறு உதவுகிறது. இது இயற்கையான பிளீச் என்பதால் கருமையான உதடுகளுக்கு நன்றாக பலனை தருகிறது . உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி, உருளைக்கிழங்கு சாறு உதட்டின் மீது சில நிமிடங்கள் தேய்க்கவும் உருளைக்கிழங்கு சாறு உதட்டை மாற்றிவிடும். உதடு கருமையாக இருப்பவர்கள் தான் அந்த பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. எல்லோருமே உதட்டிற்கு இந்த பராமரிப்பு மாற்றி மாற்றி செய்வதன் மூலமாக உதடுகளை அழகாக மற்றும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil