நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக 'டாக்டர்' பட கதாநாயகி நடிக்கிறார் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சூரரைப் போற்று' திரைப்படமாகும்.ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிக சிறந்த வரவேற்ப்பை  பெற்றது.இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில்,கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா,அதன்பின் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும்  நடிக்க இருக்கிறார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் தொடக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக,'டாக்டர்' படத்தில் சிவகார்திகேயன் ஜோடியாக நடித்துள்ள நடிகை பிரியங்கா அருள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது . சிவ கார்த்திகேயன் நடிப்பில் 'கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.இவர் கன்னட படம் ஒன்றிலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.


ஆக்‌ஷன் காமெடி கதையை கொண்ட டாக்டர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.இத்திரைப்படத்துக்காக சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட, 'செல்லம்மா' பாடல்  வைரலாக பரவியது.மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் இன்னும் திரைக்குவரவில்லை.கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம்  இணைந்து தயாரித்த 'டாக்டர்’ திரைப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பாண்டிராஜ் படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார்,நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் எனப் பல்வேறு விதமான செய்திகள் பரவி வந்தன.

இது தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ், தனது ட்விட்டர் பதிவில், "அன்புள்ள நண்பர்களே, 'சூர்யா 40' குறித்த உங்கள் ஆர்வத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம்.விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். சிறப்பான படத்தை உங்களுக்குத் தர நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்." இவ்வாறு அவர் கூறியிருந்தார்.பாண்டிராஜ் இயக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படப்பிடிப்பில் நடிகர் சூர்யா  இணைவார் என்று சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags:  latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | surya updates |