ஜாதிக்காயை எப்படி அழகு சாதன பொருட்களில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....

ஜாதிக்காய் வறண்ட சருமத்தினருக்கு, முகப்பருவுக்கும் எதிரி என்று கூட சொல்லலாம். இதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அழகு குறிப்புக்கு பயன் கிடைக்கும். ஹார்மோன் பிரச்சினைகளாலும் முகப்பருவை சந்திப்பவர்கள் அதை சரிசெய்ய ஜாதிக்காய் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. சக்தி மிகுந்த சரும பராமரிப்பு தரக்கூடியது  ஜாதிக்காய் ஆகும். சருமத்திற்கு எந்த விதத் தீங்கும் செய்யாமல் பாக்டீரியாவை அழிக்க உதவும். சருமத்தில் ஏற்படும் பிரச்சினை இருந்தால் ஜாதிக்காயை முதலில் பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக பலன் கிடைத்துவிடும்.


சருமம் இழந்த நிறம்:

சூரியனின் தாக்கத்தால் நம்முடைய சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெறுவதற்காக சாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் ஏற்படுகின்ற கரும்புள்ளிகள் ஆங்காங்கே கரை போன்ற மாற்றங்கள் இருப்பவர்கள் ஜாதிக்காயை பயன்படுத்தினால் விரைவில் குணப்படுத்தி விடலாம்.

ஜாதிக்காய்த் தூள் 1 டீஸ்பூன் அளவு மட்டும் எடுத்து அதில் எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு சேர்த்து தயிர் கலந்து நல்ல கெட்டியாக பேஸ்ட் பதத்திற்கு குழைத்து முகம் முழுக்க தடவிக் கொள்ளுங்கள். 10 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை சுத்தமாக துடைத்து மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள்.

கருப்புப் புள்ளிகள்:

முகத்தில் இருக்கும் கருப்பு புள்ளிகள் சிலருக்கு மிகவும் அசிங்கமாக இருக்கும். அதை அப்படியே விடும்போது தான், அந்த கருப்பு புள்ளி மேலும் அதிகமாகிறது. இந்த கரும்புள்ளிகளை கொஞ்சம் கவனமெடுத்து பராமரித்தால் மட்டுமே குணப்படுத்த  முடியும்.

இலவங்கப்பட்டை, ஜாதிக்காய்த் தூள், தேன் மூன்றையும் சம அளவு எடுத்து எலுமிச்சை சாறு சில துளிகள் மட்டும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இரவு தூங்குவதற்கு முன்பு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் மட்டும் தடவி விடுங்கள். மறுநாள் காலையில் மிதமான நீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

சரும சுத்தம்:

வெயிலில் சென்று வருவதாலும்  வீட்டில் இருந்தாலும் சருமத்தை எப்போதும் சுத்தம் செய்து கொண்டுதான் இருக்கவேண்டும். சருமத்தில் அழுக்குகள் சேர்ந்தாலே சருமம் மந்தமாக மாறிவிடும். ஆனால் ஜாதிக்காயை வைத்து முகத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?


தேங்காய் பாலில் ஜாதிக்காய் தூள் கலந்து முகம் முழுக்கத் தேய்க்க வேண்டும். இது நல்ல மாற்றத்தை கொடுக்கும். சருமத்தின் ஆழம் வரை சென்று சுத்தமாக வைத்திருக்கும். சருமத்தின் மூன்று அடுக்குகளிலும் சிகிச்சை கொடுக்கும். காய்ச்சாத பாலை சேர்த்து பயன்படுத்தலாம். ஆனால் பலன் வேகமாக கிடைக்க தேங்காய் பால் பயன்படுத்துங்கள். ஒருமுறை மட்டும் பயன்படுத்தினாலே முகம் எப்போதும் பளிச் என்ற நிறத்தில் இருக்கும்.

எண்ணெய் சுரப்பும் முகப்பருவும்:

முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் முகப் பருக்கள் அதிகமாக வரும். சருமத்துளைகள் பெரிதாகும். இதனால் சிக்கல் இருப்பவர்கள் ஜாதிக்காயை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது சருமத் துளைகளை அடைத்து விடும். எண்ணெய் பசையைப் போக்கு முகப்பருவை மற்றும்  அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை இவை கொண்டிருக்கின்றன.

ஜாதிக்காய் தூள், தேன் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் ஒரு பத்து நிமிடம் தடவி மசாஜ் செய்து விடுங்கள். இவை இரண்டுமே பாக்டீரிய எதிர்ப்பு மற்றும் அலர்ஜி பண்புகளைக் கொண்டிருக்கின்றன. எனவே சருமத்தை முகப்பருவில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. எண்ணெய் பசையையும் போக்கிவிடுகிறது.

இளமையை தக்க வைக்க:

ஜாதிக்காய் சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. ஜாதிக்காயை உயிரணுக்களை சேதப்படுத்தும்  பிரீ ரேடிக்கல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் மன அழுத்தம் உண்டாக கூடும். அதிகப்படியாக மன அழுத்தம் உண்டாகும் போது முகத்தில் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் போன்றவை வரக்கூடும். இதை தவிர்க்க ஜாதிக்காய், கெட்டியான தயிர், தேன் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து முகத்தில் பேஸ்ட் போல் குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து மந்தமான நீரில் கழுவினால் சுருக்கங்கள் விழுவது தள்ளிப்போகும்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil