சென்செக்ஸ் 49,600க்கு மேல் வர்த்தகம்.. இந்திய சந்தைகள் உச்சத்தில்...!
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தினை மீட்டெடுக்க அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஜேனட் எல்லன், மற்றொரு மிகப்பெரிய ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். இது கொரோனா பிரச்சனையினால் முடங்கியுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பயன்படும் என்றும் கூறினார். இந்த நிலையில் கொரோனாவின் பிரச்சனை காரணமாக சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரத்திற்க்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதன் மூலமாக டாலரின் மதிப்பும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தைகள் இதனால் ஏற்றத்தில் உள்ளன. வரலாற்றின் உச்ச கட்டத்தில் ஆசிய சந்தைகளும் உள்ளன. இதனால் இந்திய சந்தையும் ஏற்றத்தில் உள்ளது. இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலயே சென்செக்ஸ், ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து, 14,533.20 புள்ளிகள் ஆகவும், சென்செக்ஸ் 39.97 புள்ளிகள் அதிகரித்து, 49,438.26 புள்ளிகளாகவும் இருக்கிறது. இதில் 63 பங்குகள் மாற்றமில்லாமலும், 846 பங்குகள் ஏற்றத்திலும், 345 பங்குகள் சரிவிலும் காணப்படுகிறது.
நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள், பிஎஸ்இ ஆயில் & கேஸ் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக கிரசிம், ஸ்ரீ சிமெண்ட்ஸ், என்டிபிசி, ஐடிசி இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும், நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், ஈச்சர் மோட்டார்ஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் உள்ளன. டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக் , இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் இதே சென்செக்ஸ் குறியீட்டில் டாப் கெயினராகவும், இதே என்டிபிசி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிட் கார்ப், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று அதிகரித்து 73.11 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது 73.17 ரூபாயாக முந்தைய அமர்வில் முடிவடைந்திருந்தது. இதற்கிடையில் சர்வதேச சந்தையின் எதிரொலியாக தற்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது நிஃப்டி 84.20 புள்ளிகள் அதிகரித்து, 14,605.35 ஆகவும், சென்செக்ஸ் 248.56 புள்ளிகள் அதிகரித்து, 49,646.85 ஆகவும் காணப்படுகிறது.