இட்லி கடை வைத்திருப்பவரின் பிள்ளைகள் படிப்புக்கு ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார் நடிகர் அஜித் !
ஹைதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித் அங்கு இட்லி கடை வைத்திருக்கும் ஒருவரின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளதாக தகவல் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியது.ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்த கையுடன் படக்குழு அடுத்ததாக புனே சென்றுள்ளது. ஹைதராபாத்தில் இருந்தபோது அஜித் அங்கு சாலையோரம் இருக்கும் இட்லி கடை ஒன்றுக்கு இரவு நேரத்தில் சென்று சாப்பிடுவாராம்.
இட்லி கடை நடத்தி வருபவரின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக நடிகர் அஜித் அவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.சாலையோரம் கடை வைத்திருப்பவரின் பிள்ளைகளுக்கு அஜித் உதவி செய்தது குறித்து அறிந்த ரசிகர்கள் பெருமை அடைந்திருகின்றனர்.தான் யாருக்கு உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக் கூடாது என்பார் அஜித்.ஆதலால் பல நேரம் அவர் செய்யும் நல்லது குறித்து யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.அவரிடம் உதவி பெறும் சிலர் மகிழ்ச்சியில் யாரிடமாவது பரிமாறுவது மட்டுமே வெளியே வருகின்றது என்கிறார்கள் ரசிகர்கள்.தற்போது வலிமை படத்தின் அப்டேட் கிடைக்குமா என்று அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.90 சதவீத படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.முக்கியமான சில காட்சிகளை மொராக்கோவில் ஷூட் செய்யப் போகிறார்களாம்.
அந்த காட்சிகளை ஸ்பெயினில் தான் படமாக்க நினைத்தார் வினோத்.ஆனால் ஸ்பெயினில் கொரோனா அச்சுறுத்தல் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.கொரோனா பிரச்சனை காரணமாக வெளிநாட்டு ஷெட்யூல் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.ஆனால் அபடத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் தான் படமாக்க வேண்டும் என்கிற முடிவில் வினோத் இருப்பதால் படக்குழு விரைவில் மொராக்கோவுக்கு கிளம்ப போகிறது.ஆனால் தல அஜித் தன் பைக்கில் சிக்கிம் சென்றுள்ளார்.சென்னைக்கு சிக்கிமிலிருந்து பைக்கிலேயே திரும்புகிறாராம்.4 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
Tags: latest news | trending news | celebrity news in Tamil | daily updates | cinema news in Tamil | interesting news in Tamil | famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | ajith updates | thala updates |