SIP னா என்ன? SIP யால் யாருக்கு என்ன பயன்? இதன் அவசியம் என்ன..!

முதலீடு பற்றி நாம்  பேசும் போதெல்லாம், மியூச்சுவல் பண்ட் பற்றி  கேள்விப்பட்டிருப்போம். அதனால் நீங்கள் அதன் நீண்ட கால பலன் பற்றி நிச்சயம்  அறிந்திருக்கலாம். எஸ்ஐபி மூலமாக செய்யப்படும் முதலீடு,  மியூச்சுவல் பண்ட் முதலீடு என வரும் போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் மியூச்சுவல் பண்ட் முதலீடு சிக்கலானது என நினைப்பவர்கள் கூட, எஸ்ஐபி முதலீடு செய்வதற்கு  எளிதாக இருக்கும்  என கருதப்படுகிறது.

 

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்றால் என்ன?

 எஸ்ஐபி எனப்படுவது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பதனையே சுருக்கமாக, எஸ்ஐபி என அழைக்கப்படுகிறது. இந்த முறை குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில்,குறிப்பிட்ட காலக்கெடுவில் அதாவது மாதந்தோறும் அல்லது காலாண்டு என, , தொடர்ந்து முதலீடு செய்ய  வழிவகுக்கிறது. யூனிட்களாக மியூச்சுவல் பண்ட்கள்  வாங்கப்படுவதால், ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற அளவு யூனிட்கள் வாங்கப்படும்.

 

எஸ்ஐபி முதலீட்டின் அவசியம் என்ன? 

ஒரு சீரான முதலீட்டிற்கு எஸ்ஐபி முதலீடு என்பது  வழிவகுக்கும். எஸ்ஐபி, பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் குறித்து பயம் இல்லாமல்  சீரான முதலீடு செய்ய வழிவகுக்கிறது.  நாம் மாதாமாதம் சாதாரணமாக முதலீடு செய்வதாக இருந்தால், அதற்கு நேரம் கிடைக்காமல் தள்ளிப்போடவும்  வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.  சந்தை நிலையில் லாபம் , நஷ்டம்  ஏற்றாவாறும்  தள்ளிப் போடலாம். ஆனால் எஸ்ஐபி முறையில் தொடர்ந்து சீராக முதலீடு செய்து கொண்டிருக்கலாம்.

 பயன் என்ன? 

எஸ்ஐபி முதலீட்டின் சராசரி பலன் மூலம், மிகப்பெரிய பலனை பெறலாம். அதாவது ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற யூனிட்கள் இந்த முறையில் வாங்கப்படும். சந்தை ஏற்றத்தில் இருந்தால், குறைவான யூனிட்களையும் , இறக்கத்தில் இருந்தால், அதிக யூனிட்களையும்  பெறலாம். சராசரியாக பார்க்கும் போது, மொத்தத்தில்  சற்று லாபம் உள்ளதாக இருக்கும். கூட்டு வட்டி முறையின் பலனையும் இதனையே நீண்டகால முதலீடாக செய்யும் போது பெறலாம்.

 

முதலீடு செய்ய எவ்வளவு தேவை?

 எஸ்ஐபி-யில் முதலீடு செய்ய, பெரிய தொகை தேவையில்லை. நம்மால் முடிந்த தொகையை மாதம் தோறும்  முதலீடு செய்யலாம். அது 500 ரூபாய் ஆகா இருந்தாலும் நீங்கள் துவங்க முடியும். இது தொடர் வைப்பு நிதி திட்ட முதலீடு போன்றது தான்.இதில் பங்குச்சந்தை முதலீட்டின் பலனை பெறலாம். இதற்க்கு பல வகையான திட்டங்கள் உள்ளன. 


எஸ்ஐபி திட்டம் யாருக்கு ஏற்றது?

 இத்திட்டத்தில் எல்லா வகையான முதலீட்டாளர்களும், இந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பங்கேற்கலாம். சமபங்கு சார்ந்த திட்டங்களை தேர்வு செய்யலாம். தேவை எனில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இத்திட்டத்தை தொடரலாம். எப்போது வேண்டுமானாலும், முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். . உங்களது முதலீட்டினை இலக்கை அடைந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: what is sip | everything about sip | sip investment | systametic investment plan | how to invest in sip | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil