மவுனி ராயின் லாக்டவுன் காதல் - விரைவில் திருமணம்
துபாயை சேர்ந்த சூரஜ் நம்பியாரை பிரபல பாலிவுட் நடிகை மவுனி ராய் காதலித்து வருகிறார். விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.2006ம் ஆண்டு முதல் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் மவுனி ராய். நாகினி சீரியல் மூலம் அனைவர்க்கும் பிரபலமானார். சின்னத்திரையை கலக்கி வந்த மவுனி ராய் அக்ஷய் குமாரின் கோல்டு படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகினார்.இதை தொடர்ந்து அவர் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆல்யா பட் நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் மவுனி வில்லியாக நடித்துள்ளார்.
அவர் துபாய்க்கு சென்ற நேரத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விஸ்வரூபம் எடுக்கவே லாக்டவுன் அமலாக்கப்பட்டது.லாக்டவுனின்போது மவுனி ராய் துபாயில் சிக்கினார்.அவர் தன் சகோதரியின் குடும்பத்தாருடன் தங்கி இருந்தார்.அந்த நேரத்தில் துபாயை சேர்ந்த பேங்கரான சூரஜ் நம்பியார் மீது மவுனி ராய்க்கு காதல் ஏற்பட்டுள்ளது.மவுனியும் சூரஜும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.மவுனி, சூரஜ் மற்றும் அவரின் குடும்பத்தாரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் சூரஜின் பெற்றோரை அப்பா, அம்மா என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மவுனிக்கு இணக்கமான ஒருவர் கூறியதாவது,சூரஜின் பெற்றோருக்கு மவுனி ராயை மிகவும் பிடித்துவிட்டது.சூரஜின் பெற்றோருடன் நெருக்கமாகிவிட்டதால் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் மவுனி என்று கூறியுள்ளார்.மவுனி இன்னும் சூரஜை காதலிப்பதை உறுதி செய்யவில்லை.இருப்பினும் தன் தோழிகள், உறவினர்களிடம் எப்பொழுது பார்த்தாலும் சூரஜ் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர்.
பாலிவுட்டில் இது திருமண சீசன் போல் உள்ளது.தன் நீண்ட கால காதலியான ஃபேஷன் டிசைனர் நடாஷா தலாலை வரும் 24ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் திருமணம் செய்து கொள்ள போகிறார். அவர்களின் திருமண நிகழ்ச்சிகள் அலிபாக்கில் ஜந்து நாட்கள் நடக்க உள்ளது.இந்நிலையில் மவுனி ராயும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகின்றார்.அடுத்து ரன்பீ ர் கபூர்,ஆல்யா பட் திருமண செய்தியை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
Tags: latest news | trending news | celebrity news in Tamil | daily updates | cinema news in Tamil | interesting news in Tamil | famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | mouni updates | serial updates |