அரிசி மாவை பயன்படுத்தினால் முகத்தின் அழகு இன்னும் கூடுமா?

அரிசியைக் கொண்டு அழகுப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் இருந்து அழகுபடுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். இயற்கை மருத்துவம் இயற்கை அழகு என்று விரும்புவர்கள் நிறைய பேர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பராமரிக்க விரும்புகின்றனர்.  அரிசி மாவும் நம் சருமத்தில் பல விதமான நன்மைகளை தரக் கூடியது. எந்தெந்த சரும பிரச்சினைகளுக்கு எப்படி எல்லாம் இதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். 

அரிசி மாவு ஃபேஸ் பேக்: 

அரிசி மாவு - 3 டீஸ்பூன்

காய்ச்சாத பால் /பன்னீர் - 3 டீஸ்பூன்

தயிர் - 3  டீஸ்பூன்


அரிசி மாவு, காய்ச்சாத பால், தயிர் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்து விடுங்கள். அப்படியே  சிறிது நேரம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி இப்படி செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி, அழுக்குகளை அகற்றி முகத்தில் மஞ்சள் நிறத்தை மாற்றவும் செய்யும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தில் அதிசயத்தக்க அளவில் பளிச்சென்று மாறும். 

சரும அலர்ஜிக்கு அரிசி மாவு: 

சருமத்தில் ஏற்படும் கொப்பளங்கள், ஷ்ண கட்டிகள் கோடையில் ஏற்படும் சிவப்பு அரிப்பு தடிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். அரிசி கழுவிய நீர் அல்லது அரிசிமாவை சிறிது நீரில் கரைத்து அதில் ஊற்றி வைக்கவும். ஐஸ் கட்டியாக மாறும். அதை எடுத்து சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சினை இருக்கிறது அங்கு தடவிக்கொடுங்கள். தினமும் 15 நிமிடங்கள் இப்படி செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி நீங்கும்.


இறந்து செல்களை நீக்க அரிசிமாவு:

அரிசி மாவு முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க பயன்படுகிறது முகத்தில் இறந்து செல் தங்கிவிடுவதால் முகப் பருக்கள் வருகிறது. அவ்வப்போது அதை நாம் வெளியேற்ற வேண்டும். இரண்டு முறை செய்த பிறகு கிடைக்கக்கூடியவை, ஒரு முறை அரிசி மாவு பயன்படுத்தினாலே கிடைத்துவிடும். அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் லேசான மசாஜ் செய்வதும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், மூக்கு நுனிகள், கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். பிறகு ஐஸ் கட்டிகள் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள் முதல் முறை செய்யும் போது முகத்தில் பிரகாசம் தெரியும்.

ஓவர் மேக்கப் அரிசி மாவு: 

விழாக்களுக்கு செல்லும்போது அதிகமாக மேக்கப் பயன்படுத்துகிறார்கள். சாதாரணமாக மேக்கப் பயன்படுத்துவதாக இருந்தாலும் இரவு தூங்கும்போது மேக்கப் கலைந்த பிறகு தான் கொடுக்க வேண்டும். இல்லை எனில் அதில் இருக்கும் ரசாயனங்களால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேக்கப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசி மாவை தண்ணீரில் குழைத்து முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் பிறகு முகத்தை பார்த்தால் மேக்கப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil