ஆண்களுக்கு வரும் முகப்பருவை கூட ஈசியாக சரி செய்யலாம்......

ஆண்களில் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதை கொண்டவர்களுக்கும் கூட முகப் பருக்கள் வருவது அதிகரித்து இருக்கிறது. இதை சரியான முறையில் கவனிக்க வில்லை என்ற அவை நீண்ட காலத்திற்கு முகத்திலேயே இருந்துவிடும். ஆண்களில் 10% முகப்பரு பிரச்சனையை அதிகம் கொண்டிருக்கின்றார்கள். அதிகப்படியான எண்ணெய் சருமம் இருப்பவர்கள் அதிகமாக வேலை செய்து முகப்பருவை உண்டாக்கி விடுகின்றது. இதனால் சரும துளைகள் திறக்கப்பட்டு துளைகள் உருவாகிறது. இது முகங்களிலும் கழுத்துப் பகுதிகளிலும் தோள்களிலும் மற்றும் முதுகுப் பகுதிகளிலும் வரக்கூடும். இதை குணப்படுத்த வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் சரி செய்யலாம். 

தேன்:

தேன் சருமத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் மனுகா தேன் சருமத்தை பாதுகாப்பது சிறப்பாக இருக்கிறது. இது ஆன்ட்டி மைக்ரோபைல் பண்புகளை கொண்டிருக்கிறது என்பதால் இது முகப்பருவை அதிகமாக வருவது குறைகிறது. இருந்தாலும் தடுக்கிறது. இந்தத் தேனை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. முகப் பரு இருக்கும் இடங்களில் மட்டுமே பயன் படுத்தினால் போதும். முகப்பரு இருக்கும் இடங்களில் தடவி நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பருக்கள் தொடர்ந்து குறையக்கூடும். தினமும் கூட இந்த டிப்ஸை செய்து வரலாம்.


டீ ட்ரீ ஆயில்: 

டீ ட்ரீ ஆயில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி பண்புகளைக் கொண்டி ருக்கிறது. இதில் பென்சாயில் பெராக்சைடு கொண்டிருக்கிறது. அதனால் தான் சருமத்தின் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. தேயிலை எண்ணெய நேரடியாக முகத்தில் தடவும் போது குறிப்பாக முகப்பரு இருக்கும் இடங்களில் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். எனவே தேயிலை எண்ணெயுடன் வைட்டமின் ஈ ஆயில் அல்லது சமமான நீர் கலந்து பயன்படுத்தினால் சருமம் மென்மையாகவும், முகப்பருக்களும் மறைய கூடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்: 

ஆப்பிள் சீடர் வினிகர் அசிடிக் நிறைந்த பொருள் என்றாலும் முகப்பருக்களைப் போக்குவது சிறந்தது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் இவை முகம் கழுவிய பிறகு ஓனராக கூட பயன்படுத்தலாம் ஆனால் நேரடியாக பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் ஒரு டீஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சு உருண்டையை நனைத்து முகம் முழுக்க தடவி விடலாம். பயன்படுத்திய பிறகு முகத்தை கழுவ வேண்டும் என்றில்லை. ஆனால் ஆப்பிளின் புளிப்பு வாசனை உங்களை தொல்லை செய்தால் நீங்கள் அதை தவிர்த்து விடலாம். 


கற்றாழை: 

கற்றாழை முக எரிச்சலை போக்கக் கூடிய ஒரு பொருளாகும். இது சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும். கற்றாழையில் அதிக நீர் இருப்பதால் இதை சருமத்திற்கு எளிதாக பயன்படுத்தலாம். முகப்பரு இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும் அதுவும் எரிச்சலுடன் முகப்பருவை கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தீர்வாக இந்த சாலை அமைகிறது கற்றாழையின் உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை மஞ்சள் திரவம் போக அலசி நன்றாக மசித்து ஜெல் போல் ஆக்கி முகப் பருக்கள் மீது தடவினால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். முகத்தில் பளபளப்பு உண்டாகும். எண்ணெய் பசை சருமம் உடையவர்களுக்கு எண்ணெய் பசை குறைய தொடங்கும்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil