மேடை நாடகத்தில் முதல் முறையாக நடிக்கும் சிபிராஜ்!

நடிகர் சிபிராஜ் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாற்று மேடை நாடகத்தில் நடிக்க,ஒப்பந்தமாகி இருக்கிறார்.இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை ஆவார். தமிழகத்தில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து, போராடியவர்களில் இவரும் ஒருவர். இவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்க வேண்டுமென இயக்குநர் ஸ்ரீராம் முயற்சி செய்திருக்கிறார்.நடிகர் சிபிராஜ் இந்த நாடகத்தில் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்க, ஒப்பந்தமாகி இருக்கிறார்.

முதலில்,சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரை தன் மகனுக்கு சூட்டியதில் பெருமைப்படுவதாக நடிகர் சிபிராஜ் சமூக வலைதங்களில் கூறியுள்ளார்.அந்தவகையில்,இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி!இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுவதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் சிபிராஜ் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் மீண்டும் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார்.மட்டுமல்லாது இவர்,தொடர்ந்து ஜாக்சன் துரை, போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களில் சிபிராஜ் நடித்தும் வந்தார்.


தற்போது, பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இந்த திரைப்படம்,கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி இருக்கிறது.லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார்.சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்திருக்கிறார்.கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி மொத்த படத்தையும் முடித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில்,வரும் ஜனவரி 28ஆம் தேதி ’கபடதாரி’ படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. தற்போது, தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்க சிபிராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.சிபிராஜ் மேடை நாடகத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நாடகம் குறித்து நடிகர் சிபிராஜ் கூறுகையில், "இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஒரு மிகச்சிறந்த வீரர் ஆவார்.அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகவும் இன்பமான செய்தி.அதிலும் நாடகத்தில் நடிப்பது என்பது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும்.சினிமாவில் நடிக்கும் பொழுது ஏதேனும் தவறு செய்துவிட்டால் மறுபடியும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது டப்பிங்கில் சரிசெய்துவிடலாம். ஆனால் மேடை நாடகங்களில் அப்படி எல்லாம் சரி செய்து விட முடியாது.எனவே இது எனது வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.எம்ஜிஆர், சிவாஜி, எனது தந்தை சத்யராஜ் உட்பட பெரிய நடிகர்கள் பலர் மேடை நாடகத்தில் இருந்துதான் சினிமாவுக்கு வந்துள்ளனர்.ஆனால் தற்போது நடிகர்கள் மேடை நாடகங்களில் நடிப்பது முற்றிலும் குறைந்து விட்டது.இதை உணர்ந்துதான் மேடை நாடகத்தில் நடிக்க சம்மதிக்கிறேன்" என்று சிபிராஜ் கூறியுள்ளார்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | sibiraj updates |