ஒரு பெரிய கிரிக்கெட்டரை இந்தியா மிஸ் பண்ணிடுச்சு...
கோலிவுட்டுக்கு நடிகராக வந்த வெங்கட் பிரபு சென்னை 600028 படம் மூலம் இயக்குநரானார்.டென்ஷனாக இருக்கும் நேரத்தில் வெங்கட் பிரபு இயக்கிய படங்களை பார்த்தால் ரிலாக்ஸ் ஆகிவிடலாம்.அவர் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படத்தை யாராலும் மறக்க முடியாது.மேலும் அவர் தற்போது அவர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தான் மீண்டும் துவங்கியது. பொங்கல் பண்டிகை அன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் என்றால் வெங்கட் பிரபுவுக்கு மிகவும் பிடிக்கும்.இந்த நிலையில் அவர் சிறு வயதில் கிரிக்கெட் பேட்டுடன் நிற்கும் புகைப்படத்தை பிளாக் டிக்கெட் கம்பெனியின் சிஇஓ ஐஸ்வர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த வெங்கட் பிரபு, ஓமைகாட், இது எப்படி கிடைத்தது.நம்ம நாடு ஒரு பெரிய கிரிக்கெட்டரை மிஸ் பண்ணிடுச்சு என கமெண்ட் செய்துள்ளார்.அதை பார்த்த இன்னொருவர்,அதனால் தான் உங்களுக்கு பதில் சச்சின் வந்துவிட்டார் என்று கூற, சிரிக்கும் ஸ்மைலியை போட்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபுவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் என்று கூறியுள்ளனர்.முன்னதாக சிம்புவின் ஈஸ்வரன் படக்குழு வெங்கட் பிரபுவுக்கு பொங்கல் சீர் கொடுத்தனர்.அந்த பொங்கல் சீருடன் எடுத்த புகைப்படத்தை வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.ஈஸ்வரன் பொங்கல் சீர் கிடைத்த மகிழ்ச்சியை வரலட்சுமி சரத்குமாரும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஈஸ்வரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
Tags: latest news | trending news | celebrity news in Tamil | daily updates | cinema news in Tamil | interesting news in Tamil | famous updates | trending topics | director updates | popular topics | cinema updates | tamil movie updates