இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்யும் திட்டம்.. ! அமேசானுக்கு பிரச்சனை தான்.. !!

டெல்லி:  இ-காமர்ஸ் அன்னிய முதலீட்டு விதிகளில் மாற்றம் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆன்லைன் முன்னணி  இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுக்கு சற்று பிரச்சனை தான் என கூறப்படுகிறது. புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பட்சத்தில் அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள்  மீறுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றது.

இரண்டு பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் நாட்டில் வர்த்தகம் செய்யும் அந்நிய முதலீடு குறித்து அமலாக்க இயக்குநரகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி விசாரிக்க அரசு அவர்களுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை மற்றும் ஃபெமா விதிகளை மீறுவது குறித்து அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (கேட்)  குறித்து பல புகார்களை அளித்தது. இதன் பின்னரே  இப்படி ஒரு நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்தது.

 

இந்த விதிகள் இதற்கிடையில் தான்  மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தியா இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு வாங்குபவர்களையும், விற்பவர்களையும் இணைக்க சந்தையாக செயல்பட அனுமதிக்கிறது. இது எதை தடை செய்கிறது என்றால் சரக்கை  மொத்தமாக வைத்திருப்பதையும், அவற்றை நேரடியாக விற்பனை செய்வதையும் தடை செய்கிறது. அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் கடைசியாக கடந்த டிசம்பர் 2018 நேரடி முதலீட்டு விதிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. புதியாக கொண்டு வரப்படும் விதிகள் மூலம் இன்னும் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: india plans to chang foreign investment rule | e commerce | amazon problems | upcoming news | trensing news in tamil | flipcart organization Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil