அட்லீ செய்வது சரியல்ல என அவரின் மனைவியிடம் விஜய் ரசிகர்கள் புகார்!
தளபதி விஜய்யை வைத்து படம் எடுக்க எத்தனையோ இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.அப்படி இருக்கும் போது தெறி, மெர்சல், பிகில் என்று அவரை வைத்து மூன்று படங்களை இயக்கி இருக்கிறார் அட்லீ.விஜய் கால்ஷீட் எப்படித் தான் அட்லீக்கு மட்டும் கிடைக்கிறதோ என்று புலம்பிய வண்ணம் உள்ளனர்.அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் கடைசியாக வெளியான பிகில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த 13ம் தேதி வெளியானது. மாஸ்டர் ரிலீஸுக்கு முந்தைய நாள் அந்த படத்தின் காட்சிகளை ஒருவர் ஆன்லைனில் கசிய வைத்து விட்டார்.
அதை பார்த்து மாஸ்டர் படக்குழு மட்டும் அல்ல ஒட்டுமொத்த திரையுலகமும் பதறி போனது.அவ்வாறு கசிந்த காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என மாஸ்டர் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கேட்டுக் கொண்டனர். விஜய்யின் தளபதி அறுபதைந்தாவது படத்தில் இருந்து வெளியேறிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட மாஸ்டருக்கு ஆதரவாக ட்வீட் செய்தார்.இப்படி பல பிரபலங்கள் மாஸ்டருக்காக குரல் கொடுத்தபோது அட்லீ அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை.அதுமட்டுமின்றி படம் ரிலீஸான பிறகும் அது பற்றி அட்லீ சமூக வலைதளங்களில் ஒரு வார்த்தை கூட கூறவில்லை.இதனை கண்ட விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் ப்ரியா தன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.அந்த புகைப்படத்தை எடுத்தது தன் கணவர் அட்லீ என குறிப்பிட்டிருக்கிறார்.ப்ரியாவின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, உங்களின் புகைப்படம் நன்றாக உள்ளது.அட்லீக்கு கைவசம் இன்னொரு தொழில் இருக்கின்றது.நன்றாக புகைப்படம் எடுக்கிறார்.மாஸ்டர் படம் ரிலீஸாகி இருக்கிறது.ஆனால் உங்கள் கணவர் இதுவரை ஒரு ட்வீட் கூட போடவில்லை.அவர் இயக்கத்தில் மட்டும் தான் அண்ணன் நடிக்கணும் என்று எதிர்பார்க்கிறாரா?எனவும் , அட்லீயிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என கூறியிருக்கின்றனர்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
Tags: latest news | trending news | celebrity news in Tamil | daily updates | cinema news in Tamil | interesting news in Tamil | famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | atlee updates | director updates |