சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை சிவப்பழகுக்கு பயன்படுத்தலாம் வாங்க....

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு இனிப்பு நிறைந்த உணவுப் பொருள் என்றால் அது பீட்ரூட் என்று சொல்லலாம். இந்த பீட்ரூட் அனைவருக்குமே பிடித்த உணவாகும். நம் உடலுக்கு தேவையான சத்துக்களான இரும்புச் சத்து வைட்டமின்கள் என ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்களை கொண்டிருக்கிறது. பீட்ரூட்டின் மற்றொரு குணம் என்னவென்றால் இது சரும வியாதிகளை குணப்படுத்தும் என்பதுதான். இது சருமத்தின் வறட்சியையும் நீக்கி சருமம் மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் உடலுக்கு மட்டும்தான் பீட்ரூட் என்றில்லாமல் அது சருமத்திற்கு நல்லது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வோம். 

பீட்ரூட் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் பருக்கள் போய்விடுகிறது. நம் முகத்தின் நிறத்தை மீட்டெடுக்கவும் பீட்ரூட் சாறு உதவுகிறது. உதட்டுக்கு இயற்கையாகவே சிவப்பு நிறத்தையும் அழைக்கிறது. முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவதற்கு அதிலும் சிவந்த நிறம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற பொருள் இந்த பீட்ரூட் ஃபேஸ் பேக் ஆகும். 


வெயிலில் சுற்றும் போது முகத்தின் நிறம் மங்கிப் போய் பொலிவை இழந்து இருக்கும்‌. அதனால் எப்படி மேக்-கப் செய்தாலும் முகத்தின் பொலிவு அப்படியே தான் இருக்கும். அதனால் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை பீட்ரூட்  பயன்படுத்துவது நன்றாக இருக்கும். பீட்ரூட்டின் தோலை சீவி ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளுங்கள். கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவு அரை கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். கற்றாழை சாறு அல்லது வேறு ஏதேனும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம். துருவிய பீட்ரூட் உடன் இந்த மூன்றில் ஒன்று சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு மட்டும் பாசிப்பயிறு மாவு சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தடவி ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளுங்கள். முப்பது நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.  மாதம் இருமுறை செய்தால் நீங்கள் தனியாக மேக்-கப் செய்ய வேண்டியதில்லை. அதற்கேற்றார்போல மிகவும் பளபளவென்று அழகாக இருக்கும். சருமத்தில் வறட்சியை போக்க பீட்ரூட் துருவலுடன் வாழைப்பழம் சேர்த்து மசித்து முகத்திற்கு போட்டு வந்தால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். கன்னங்களின் ரூல்ஸ் போடாமல் முகம் சிவப்பாக இருக்கும். பயன்படுத்தும்போது இந்த மாற்றத்தை நீங்களே உணரலாம். 

எண்ணெய் பசை சருமத்தை கொண்டிருப்பவர்கள் பீட்ரூட் துருவலுடன் பப்பாளிப் பழம் சேர்த்து உபயோகிக்கலாம். பால் சேர்த்து கலந்து கொள்ளவும். வீட்டில் பேஷியல் செய்யும் போது ஃபேஸ் பேக் போடும் போது இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை அடுத்து 5 பேக் போடுவதற்கும் சரியாக விடும். முகத்திற்கு தேவையான ஈரப்பசை மிகுந்த சருமம் கிடைக்கும். அதுவும் பொலிவாகவும் இருக்கும். முகத்தில் பருக்களால் வந்த வடுக்கள் இருந்தால் அந்த இடத்தில் முகத்தின் நிறத்தில் காட்டிலும் நிறம் சற்று கருப்பாக இருக்கும். அந்த இடத்தில் பீட்ரூட்டில் நீர் விடாமல் கெட்டியாக மசித்து ஓட்ஸ் உடன் சேர்த்து கலந்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் கருமை மறைந்து முகம் பிரகாசமாக இருக்கும். 

லிப்ஸ்டிக் பயன்படுத்துவது அதிகரித்து விட்ட நிலையில் நான்கு நாள் போடாமல் இருந்தால் உதட்டின் நிறத்தை கண்டு நீங்களே அதிர்ச்சி அடைந்து விடுவார்கள். அந்த அளவிற்கு உதடு பொலிவிழந்து காணப்படும். மாறாக வீட்டில் இருக்கும் போதெல்லாம் பீட்ரூட்டில் தண்ணீர் விடாமல் மசித்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் உதட்டின் மீது தடவி வர இரவு நேரங்களில் உதட்டில் லிப்ஸ்டிக்கை உதட்டின் மீது தடவி வர வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் தடவி வந்தால் லிப்ஸ்டிக் இல்லாமல் உதடுகள் சிவப்பாய் மிளிர்வதை பார்க்கலாம்.



கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை மறைக்க கூட பீட்ரூட் பயன்படுத்தலாம். கருவளையத்தை மறைக்கப் செய்வதற்கு நாம் என்னதான் பராமரிப்பு செய்தாலும் கருவளையம் போகாது. கருவளையம் இருக்கும் இடத்தில் சருமத்தின் நிறம் மீண்டும் வராது. ஆனால் பீட்ரூட் பராமரிப்பு கொண்டு செய்யும் போது கருவளையம் நீங்கி முகம் பிரகாசமாக இருக்கும். கருவளையம் இருந்த இடத்தின் சரும நிறமும் அழகாய் மாறும். 

இது பல முறை சொல்லிய விஷயம் தான் முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தோடு கழுத்துக்கும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அழகு குறிப்பு நிச்சயம் பலன் தரும். இனி பீட்ரூட்டை உடலுக்கு மட்டுமில்லாமல் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் சருமத்திற்கும் போஷாக்கு கிடைக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil