MSME-களுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளது என்னவென்றால், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 1.14 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உத்தரவாத திட்டத்தின் கீழ்  இந்த 100 சதவீத கடன்  1.14 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஏற்கனவே  56,091 கோடி ரூபாய் நிதியானது  வழங்கப்பட்டுள்ளது.

 

பொதுத்துறை வங்கிகள் 65,863.63 கோடி ரூபாய் நிதியினை, ஆத்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ்  32,00,430 கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அனுமதித்துள்ளன. இதில் 35,575.48 கோடி ரூபாய் நிதியினை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  4,28,014 வங்கி கணக்குகள் மூலம் தனியார் வங்கிகள் 48,638.96 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 20,515.7 கோடி ரூபாய் கடன் மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

 இந்த கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் அதிகளவில் கடன் வழங்கியுள்ள வங்கிகள் சில எஸ்பிஐ, ஹெஸ்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் அதிகளவில் கடன் வழங்கியுள்ளன. 

கொரோனாவின் மத்தியில் மிக அழுத்தத்தில் இருக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசின் இந்த அதிரடியான திட்டமானது  உதவும் என்றும், முக்கியமாக 19 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவும் என்றும் கூறப்படுகிறது.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசின் இந்த திட்டமானது உதவும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.  பல பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும்  கொரோனாவிற்கு மத்தியில் எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு, இது புத்துயிர் கொடுக்கும் விதமாக உள்ளது. மத்திய அரசு இந்த திட்டத்தின் மூலம்  3 லட்சம் கோடி ரூபாய் கடனை வழங்கும் திட்டத்தினை அறிவித்திருந்தது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: msme | banks approved loan | rs 1-14-lakh-crore loan | credit guarantee scheme for msme | msme loan | upcoming news in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil