சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அழிக்க பழத்தோலில் ஸ்க்ரப் பொடியா?

ஸ்க்ரப்: 

வெளியில் சென்றால் தூசு, மாசு முகத்தில் படியும். இதை வெளியேற்றும் சருமத் துவாரங்களில் அடைப்பு இருப்பதை நீக்க தான் செய்கிறோம். பொதுவாகவே முகத்திற்கு பேஷியல் போடும் போது அழகு நிலையங்களிலும் முகத்திற்கு ஸ்க்ரப் செய்வது வழக்கமாக தான் இருக்கிறது. ஆனால் இப்போது அனைவரும் வீடுகளிலேயே ஸ்க்ரப் செய்வது அதிகரித்து வருகிறது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அழிவதும் பிறகு உருவாவதும் உண்டு என்பது அனைவருக்குமே தெரியும். அப்படி அலையும் செல்கள் வெளியேறும்போது சருமம் பளிச்சென்று பிரஷ்ஷாக இருக்கும். ஆனால்  சருமம் துவாரங்களில் ஏற்கனவே தூசும் மாசும் இருப்பதால் அவை வெளியே வராமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. போகப்போக சுசுரவென்று ஆவதோடு வயதான தோற்றத்தையும் உருவாக்கிவிடுகிறது. இதை நீக்குவதற்கு தான் நாம் ஸ்க்ரப் செய்கிறோம். 

பயன்படுத்தும் பொருள்கள்: 

ஸ்க்ரப் என்பது சற்று சொரசொரப்பான பொருளை கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யப்படும். இப்படி செய்வதால் சருமம் பளிச்சென்று ஆவதோடு புத்துணர்வு பெறுகிறது. கடைகளில் ஸ்க்ரப் தாண்டி வீட்டிலேயே பயன்படுத்த கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தலாம். சர்க்கரை, கோதுமை, தவிடு, ரவை, உப்பு, ஓட்ஸ் போன்றவை ஸ்க்ரப் செய்ய பயன்படுத்துகிறோம். இந்த அனைத்து பொருட்களுமே மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் சிறந்த பொருளாகும். இதனோடு எலுமிச்சை, தயிர், தக்காளி, வெள்ளரி, கற்றாழை போன்ற பொருட்களையும் சேர்த்து செய்வதுண்டு. ஆனால் ஸ்க்ரப் செய்வது அழகோடு ஆரோக்கியத்தையும் தரும் என்பதால் பயன்படுத்தும் பொருளையும் கவனமாக தான் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் நாம் வீணாக தூக்கி எறியும் பழங்களின் தோல் பதப்படுத்தி ஸ்க்ரப் செய்யலாம்.

ஆரஞ்சு பழத்தோல்: 

பொதுவாக பல தோல்களில் மென்மையாக இருக்கும் மசாஜ் செய்யலாம். ஆனால் ஆரஞ்சு, மாதுளை பழத் தோலை உலர வைத்து பொடி ஆக்கும் போது மிருதுவான தன்மையை இழந்து விடுவதால் இதை ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தலாம். ஆரஞ்சு பழத் தோலை நறுக்கி உலர வையுங்கள். இதன் மிருதுவான தன்மை நீங்கி காயும்வரை உலர விட்டு ரவை போன்று உடைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வையுங்கள். ஸ்கரப் செய்வதற்கு என்பதால் இப்படி அழைப்பது தான் நல்லது.


மாதுளை: 

மாதுளை சத்து நிறைந்த ஒரு பழம் ஆகும். இது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை. மாதுளைப்பழத்தில் உள்ள முத்துக்கள் சாறு பிழிந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் இயற்கையாகவே பிங்க் நிறத்தில் மாறும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதைப்போன்று மாதுளையின் தோலை பதப்படுத்தி வையுங்கள். பிறகு காய்ந்த தோலை மிஷினில் அல்லது மிக்ஸியில் ரவையாக பொடித்துக் மெல்லிய துணியால் சலித்து கண்ணாடி பாட்டிலில் வையுங்கள். இந்தப் பொடியை நாம் ஆறு மாதங்கள் வரை கூட பயன்படுத்தலாம்.மாதுளை தோளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றுவதோடு புதிய செல்களும் உற்பத்திக்கும் உதவும் என்பதாகப் செய்வதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சருமத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். நான் இந்த ஸ்க்ரபப்பை பயன்படுத்துவதால் விரைவில் முக சுருக்கம் ஏற்படாது. வறட்சியான சருமத்திற்கு ஈரப்பதத்தை அழிக்க உதவும் என்பது இதன் தனிச் சிறப்பாகும்.


எப்படி ஸ்க்ரப் செய்வது?

பழத் தோலைக் கொண்டு ஸ்கரப் செய்வதாக இருந்தால் ஆரஞ்சு மற்றும் மாதுளை இரண்டுமே மிகவும் நல்லது. இரண்டையும் சேர்த்து கூட உபயோகிக்கலாம். ஸ்க்ரப் செய்யும்போது இதனுடன் தயிர், எலுமிச்சை, கற்றாலை இவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து பயன்படுத்தினாலே போதுமானது.

பொதுவாக ஸ்க்ரப் செய்யும் போது சருமத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வடுக்கள் இருப்பவர்களுக்கு எரிச்சல் வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த இயற்கை ஸ்க்ரப் சருமத்தின் இறந்த செல்களை வெளியேற்றுவதோடு சருமத்தில் உண்டாகும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

இனி மாதுளை தோலையும் ஆரஞ்சு தொலையும் வீசி எறியாமல் ஸ்க்ரப் செய்ய பயன்படுத்துங்கள். மற்ற எல்லா பொருட்களையும் விட இவை சருமத்திற்கு 100% நன்மையை மட்டுமே செய்யும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil