ஆப்பிள் பழத்தை வைத்து எந்த வகை சர்மமாக இருந்தாலும் ஃபேஸ் மாஸ்க் போடலாம்.....

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம்  போகத் அவசியமில்லை என்று அனைவரும் சொல்வதுண்டு. அப்படி உடலுக்கு ஆரோக்கியம் தருவது போல சருமத்திற்கும் நல்ல சத்தைக் கொடுக்கிறது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின்  இ, தாமிரம் போன்ற ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. ஆப்பிள் பழம் உடலுக்கு நன்மை தருவது போல சருமத்திற்கும் நன்மை தருகிறது. சருமத்தை பாதுகாக்கும் கொலாஜன் சுரப்பை அதிகரிக்க ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது. இதனால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் விழுவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆப்பிளில் மெலனின் உற்பத்தி சீராக வைக்க உதவுகிறது. சூரியனிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களினால் சேதம் அடைவதை தடுக்கிறது. வைட்டமின் சி ஆனது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர்ச்சியடையச் செய்கிறது. இத்தனை நற்குணங்கள் நிறைந்த அப்பிளை எல்லா சருமத்தினரும் பயன்படுத்தலாம். மேலும் பொலிவை கூட்டலாம். 

எண்ணெய் சருமம்:

எண்ணெய் சருமத்தை உடையவர்கள் இந்த பராமரிப்பு செய்தாலும் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான எண்ணெய் சருமத்திற்கு உண்டாக்கும் வாய்ப்புண்டு


ஆப்பிள் - பாதியளவு

தயிர் - இரண்டு ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

ஆப்பிளை நன்றாகக் கட்டியில்லாமல் மசித்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் கலக்கி 5 நிமிடம் வைக்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் ஆனது  சருமத்திற்கு   சிறந்த மாய்ஸ்ரைசராக செயல்படுகிறது. அதோடு முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை உறிஞ்சி சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

வறண்ட சருமம்: 

வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எவ்வளவுதான் மேக்கப் போட்டாலும் முகத்தில் வறட்சியாக தான் இருக்கும். வறட்சியாக இருக்கும் முகத்தை பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்றால் ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் முகத்தை இன்னும் அழகாக வைத்திருக்கலாம். 

ஆப்பிள் - பாதியளவு

கிளிசரின் - 5 சொட்டுகள்


ப்பிளை நன்றாக மசித்து அதனுடன் கிளிசரின் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திருக்கு வந்துவிடும். இதை முகத்தில் தடவினால் சருமம் சத்தை உறிஞ்சிக்கொள்ளும்.  20 நிமிடங்கள் கழித்து முகத்தை சூடான நீரில் கழுவ வேண்டும். மிகவும் எளிமையான மற்றும் நல்ல பலன் தரும் முறை என்பதால் தவறாமல் கடைபிடிக்கலாம். 

மென்மையான சருமம்: 

சருமம் மிக மென்மையாக இருப்பவர்கள் ஃபேஸ் பேக் போடுவது சருமத்தில் எரிச்சல் தரும் பொருட்களை  எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது. 

ஆப்பிள் - பாதியளவு

பழுத்த வாழைப்பழம் - பாதியளவு

வெண்ணெய் - சிறிதளவு


ப்பிளை நேரடியாக மசிக்காமல் இட்லி பானையில் வைத்து அரை வேக்காடு வெந்த பிறகு மசித்துக் கொள்ளுங்கள்.  வெந்தவுடன் ஆப்பிளை எடுத்து தோலை உரித்தால் அது தானாக வந்து விடும். ப்பிள்ளை கையால் மசித்து அதனுடன் வாழைப்பழம் சேர்த்து இரண்டையும் கலந்து வெண்ணெய் சேர்க்கவும். பிறகு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்தால் நன்றாக க்ரீம் பதத்திற்கு வரும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவினால் முகத்தின் மென்மை பாதுகாப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முகம் பொலிவோடு இருக்கும்.

பொதுவான சருமம்: 

மிருதுவான சருமம் உடையவர்கள் எந்த ஃபேஸ் பேக் போட்டாலும்  அது நல்ல பலனைத் தரும்.

ஆப்பிள் - பாதி அளவு

தேன் - தேவைக்கு

ஆப்பிளை மசித்து அதில் சுத்தமான தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். தேன் சருமத்தை சுத்தம் செய்ய உதவும். தேன் சாதாரனமாகவே பரபரப்பை உண்டு செய்யவும் உதவும் பொருளாகும். இது அழகுப் பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

உடனடி முக பொலிவுக்கு: 

மாதுளை, தக்காளி, தர்பூசணி ஏதேனும் ஒரு சாறு

காய்ந்த பால்/ தயிர் - தேவைக்கு


ஆப்பிளை மசித்து ஏதேனும் ஒரு பழத்தை தேர்வு செய்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல் ஆக்குங்கள். பிறகு இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவித் துடைத்தால் முகம் பிரகாசமாக மின்னும். 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil