நயன்தாராவால் நஷ்டம் என கூறும் தயாரிப்பாளர்!

நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் நயன்தாராவும், ஆண்ட்ரியாவும் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு வைப்பதாக தெரிவித்தார்.சென்னையில் வெட்டி பசங்க படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.திரையுலகை சேர்ந்த பலரும் அதில் கலந்து கொண்டனர்.தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் அந்த விழாவில் பேசியபோது கூறியதாவது.கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் இந்நிலையில் தயாரிப்பு செலவையும்,நடிகர்கள்,நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும்.

சில நடிகர்களும், நடிகைகளும் கூடுதல் செலவு வைத்துவிடுகிறார்கள். தனக்கு சிகை அலங்கார நிபுணர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆகியோர் மும்பையில் இருந்து தான் வர வேண்டும் என்கிறார் நயன்தாரா.மும்பையில் இருந்து வரும் அவர்களின் சம்பளம், விமான செலவு, ஹோட்டல் செலவு ஆகியவற்றை தயாரிப்பாளர் தான் ஏற்க வேண்டி உள்ளது.நயன்தாராவின் மேக்கப் மேன், உதவியாளர்கள் என்று அவருடன் வரும் ஏழு பேருக்கு நாள் ஒன்றுக்கு மட்டும் ரூ. 1.5 லட்சம் செலவாகிறது.


நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் அவரின் உதவியாளர்களுக்கு மட்டும் சுமார் ரூ. 60 லட்சம் செலவு செய்ய வேண்டியதாய் இருக்கிறது.நயன்தாரா மட்டும் அல்ல ஆண்ட்ரியாவும் தன் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சிகை அலங்கார நிபுணர் மும்பையில் இருந்து தான் வர வேண்டும் என்கிறார்.நடிகர்கள் தங்கள் பாடிகார்டுகளுக்கு தயாரிப்பாளர்களை சம்பளம் கொடுக்க வைக்கிறார்கள்.இவர்களால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது போன்ற செலவுகளை குறைத்தால் தான் சினிமா வாழும் என்றார்.

நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், ரஜினியின் அண்ணாத்த, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்கிறார். இது தவிர்த்து மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படம் வைத்திருக்கிறார்.நயன்தாரா தமிழ் படங்களில் நடிக்க ரூ. 5 கோடி வாங்குகிறார். அதுவே அவர் தாய் மொழியான மலையாள படங்களில் நடிக்க ரூ. 1 கோடி தான் வாங்குகிறார். இது என்ன இப்படி செய்கிறார் என்று ஏற்கனவே சில தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள்ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள்வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம்பார்த்து என்ஜாய் பண்ணுங்கஉங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள்இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | nayan updates | popular topics | cinema updates | trending topics | nayanthara movie updates |