மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..! கூகுள்-ஐ தோற்கடித்த போன்பே..!!

இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை   அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போட்டி, இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் போட்டி  உருவாகியுள்ளது. அதில் குறிப்பாக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில்  யூபிஐ பணப் பரிமாற்ற சேவையை அளிக்கும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்தியாவில் கடுமையான போட்டியாக இருந்த போன்பே, கூகுள் பே, பேடிஎம், ஆகிய நிறுவனங்கள் மத்தியில் சமீபத்தில் வாட்ஸ்அப் பே அறிமுகம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

கூகுள் போன்ற பெரும் நிறுவனங்களைச் சமாளித்து, இந்தப் பாதிப்புகளையும் தாண்டி டிசம்பர் மாதம் நாட்டின் முன்னணி போன்பே யூபிஐ செயலியாக உருவெடுத்துள்ளது . டிசம்பர் மாதம் கூகுள் பே யூபிஐ செயலியில் தேசிய பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்கள் படி இந்தியாவில் மக்கள் 854.49 மில்லியன் பரிமாற்றங்கள் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாயைப் பரிமாற்றம் செய்துள்ளனர். இதே டிசம்பர் மாதத்தில் நாட்டின் மிகப்பெரிய யூபிஐ செயலியாக முன்னேறியுள்ள போன்பே செயலியில் சுமார் 902.03 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் மூலம் சுமார் 1.82 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளது . மேலும்  நாட்டின் மொத்த யூபிஐ பணப் பரிமாற்ற வர்த்தகத்தில் போன்பே மற்றும் கூகுள்பே ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே 78 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளது. நவம்பர் மாதத்தில் இதன் அளவு 86 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 பேடிஎம் செயலி 3வது இடத்தில் 256.36 மில்லியன் பணப்பரிமாற்றத்தின் மூலம் 31,291.83 கோடி ரூபாய் அளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளது. இந்தியாவில் புதிதாக அறிமுகமாகியுள்ள வாட்ஸ்அப் பே  சுமார் 8,10,000 பரிமாற்றங்கள் மூலம் 29.72 கோடி ரூபாய் அளவிலான பணப் பரிமாற்றத்தைச் டிசம்பர் மாதத்தில் செய்துள்ளது. 5வது மற்றும் 6வது இடத்தில் அமேசான் பே மற்றும் அரசின் BHIM செயலி உள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: phonepe | google pay upi clocked | 2-23 billion transactions in december | phonepe money transaction | india's payments app | phonepe login | phone pe app | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil