நாவல் பழம் சர்க்கரையை கண்ட்ரோல் செய்யுமா?

நம் நாட்டு பல வகைகளில் நாவல்பழம் ஒன்றாகும்.இந்த பழம் கொஞ்சம் புளிப்பும் லேசான இனிப்பும் துவர்ப்பும் கொண்ட ஒரு சுவையான பழம் ஆகும் இந்த பழத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக பள்ளிக்கூடங்களில் வெளியே பார்த்திருப்போம். நாவற்பழங்களை காட்டிலும் அதன் கொட்டைகள் மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன. இவை ஆயுர்வேதம் சித்த மருத்துவம் போன்றவற்றில் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.இந்த நாவல் பழம் நீரிழிவுக்கு உகந்ததாக இருக்கும் நீரிழிவுக்கு கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகள் நன்மை தரும் இயற்கையிலேயே துவர்ப்பு சக்தி நிறைந்த நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இதனை சாப்பிட்டால் உடல் சோர்வு இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.நாவல் பழத்தின் மீது லேசாக உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் அதையும் அளவோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.



இந்த நாவல் பழம் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது.இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக விளங்குகிறது. மேலும் ரத்த அணுக்களை அதிகரிக்க செய்கிறது இதனால் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தடையில்லாமல் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல முடிகிறது. பெண்களுக்கு மிக உகந்ததாக நாவல்பழம் அமைகிறது ரத்த சோகை மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பயன்படுகிறது. அளவான வடிவில்நாவல்பழம் எடுத்துக்கொள்ளும்போது அது இதய நோய்களையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.100 கிராம் நாவல் பழத்தில் 55 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது இது ரத்த தமனிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நாவல் பழம் சர்க்கரை நோய்களுக்கு மட்டும் மருந்தாக பயன் படாமல் பல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது ஈறுகளுக்கும் பற்களுக்கும் நன்மை பயக்கும்.நாவல் பழம் ஈறுகளில் வீக்கம் ரத்தம் வடிதல் பல் கூச்சம் வாய் வழி தொற்றுக்கிருமிகள் நாவல்பழத்தின் இலைகளை கொண்டு போக்கலாம்.நாவல்பழ இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால் வாய்ப் புண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய பழமாக விளங்குகிறது.

நாவல் பழத்தின் நன்மைகள்:

கல்லீரலை பாதுகாக்கிறது.

மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கிறது. உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

பற்களுக்கு வலிமை சேர்க்கிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதயக் கோளாறுக்கு நல்லது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil