சசிகுமார் நிஜ கதையில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் /பெ.ரணசிங்கம்.இந்த திரைப்படத்தினை பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரான கொட்டப்படி.ஜெ.ராஜேஷ் தனது கே.ஜெ.ஆர் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தது.கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படம், திரையில் வெளியாகாமால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாது பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டி வந்தார்கள்.

 இதன்பின் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் இயக்குநர்.விருமாண்டி /பெ.ரணசிங்கம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்ட படமாகும்.இதைப் போலவே இப்படமும் ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட இருக்கிறது.'எத்தனை காலம் கடந்தாலும் இந்த மண்ணோடு உறவாடி உங்கள் மனதோடு நிலைபெற்று நிற்கும் கதையுடன் வருகிறேன்' என விருமாண்டி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.தற்போது, பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு விருமாண்டி இத்திரைப்படத்தை உருவாக்குகிறார்.


 நடிகர் சசிகுமார் இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலிலிருந்து தொடங்க இருக்கிறது.பரதன் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை நேற்று நடைபெற்றது.இத்திரைப்படத்துக்கு வைரமுத்து பாடலாசிரியராகவும்,என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும்,டி.சிவா நாதீஸ்வரன் எடிட்டராகவும், ஜிப்ரான்இசையமைப்பாளராகவும்  பணிபுரிகிறார்கள்.ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி,இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளிக்கொண்டு வர முடிவு செய்திருக்கின்றனர்.தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

நடிகர் சசிகுமார்,தமிழ்த் திரைப்பட இயக்குநராகவும்,நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.பாலா,அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி இருக்கிறார்.இவர் 2008ஆம் ஆண்டு வெளிவந்த 'சுப்ரமணிய புரம்திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்.சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’,‘எம்.ஜி.ஆர் மகன் ’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது.இதுதவிர பாக்யராஜ் இயக்கி நடித்து ஹிட்டான ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் சசிகுமார் கவனம் செலுத்தி வருகின்றார்.பாக்யராஜ் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | popular news |