முதலீடு செய்யப்போறீங்களா மியூச்சுவல் ஃபண்டில்... முதலில் இதை படிங்க.. !!

சந்தை சரிவில்  ஃபண்டுகளின் முதலீட்டு லாபம் குறைவாக   இருந்தாலும் முதலீடு செய்யலாம். ஏனென்றால் கூடுதல் யூனிட்கள் அதன் மூலம்  கிடைக்க வாய்ப்புண்டு.  ஒரே ஃபண்டில் பணத்தை முதலீடு செய்யாமல், பலவிதமான ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஆபத்தும் குறைவாக இருக்கும். ஏனென்றால் லாபம் ஒரு ஃபண்டில்  கிடைக்காவிட்டாலும், மற்ற ஃபண்டுகளில் லாபம் கிடைக்கலாம். இதனால் ரிஸ்கும் குறையும். குறைந்தபட்ச வருமானமும்  கிடைக்கும்.

 

எந்த ஒரு காரணத்திக்காகவும்  கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். அது மியூச்சுவல் ஃபண்டு மட்டும் அல்ல, கடனை வாங்கி வேறு எந்த வகையான முதலீடுகளையும் செய்யாதீர்கள். இதெல்லாம் விட முக்கியமானது என்னவென்றால்   எந்த ஃபண்டில் எல்லாம் முதலீடு செய்யாலாம் என பலரிடம் ஆலோசனையை கேளுங்கள்.  இறுதி முடிவு மட்டும்   உங்களுடையதாக  இருக்க வேண்டும். முதலீடு செய்யும் போது  யாரையும் சார்ந்து இருக்காமல்  அவர் சொன்னார், இவர் சொன்னார் என முதலீடு செய்யக்கூடாது. தனித்து முடிவு எடுக்க வேண்டும்.  இதனை பற்றி தெரிந்து கொள்ள இன்றைய காலகட்டத்தில் நிறைய வழிகள் உள்ளன.  நிறைய தகவல்களை ஆன்லைனிலேயே  படித்து தெரிந்துகொள்ளலாம் . 

இலவச வகுப்புகளையும் பல நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. நிறைய புத்தகங்களை படித்தும்  நாம்  தெரிந்து கொள்ளலாம். ஆனால் யாரோ சொன்னார்கள் என, எக்காரணத்தினைக் கொண்டும் எதுவும் தெரியாமல் முதலீடு செய்யாதீர்கள். புதியதாக முதலீடு செய்பவர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு முதலீட்டு ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இத்தகைய நடைமுறை சரிவை சந்திக்கும் திட்டங்களிலிருந்து தப்பிக்க  அவசியம் ஆகும். எந்த  துறையானது எப்போது சரிவினைக் காணும் என்று ஓரளவுக்கு கணித்து சொல்வார்கள்.

 

ஒரு ஃபண்டில் முதலீடு செய்கிறோம் என்றால் அது  பல மாதங்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், அதை வேறு ஃபண்டிற்கு மாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும், அவசர தேவைகளுக்கு வைத்திருக்கும் பணத்தினை முதலீடு செய்யாதீர்கள். நீங்கள் முதலீடு செய்வது நல்ல விஷயம் தான். ஆனால் முதலீடு செய்வதற்கு முன்பு  பல முறை யோசித்து, முடிவு செய்து, இது சரியான முதலீடு தானா? என்பதையும் யோசித்து முதலீடு செய்ய வேண்டும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags:mutual funds | investing decisions | sbi mutual funds | types of mutual funds | top mutual funds | mutual fund investing | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil