பூண்டை முகத்துக்கு யூஸ் பண்ணலாமா? பண்ண கூடாதா?

பூண்டு மசாலாவுக்காக  சேர்க்கப்படும் உணவுப்பொருள்  மட்டுமல்ல. இது ஆரோக்கியமானது. பலவிதமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அழகு குறிப்பில் சரும பராமரிப்பிற்கு பெரிதும் பூண்டு உதவுகிறது. பூண்டு முகம், சருமம், கூந்தல் என்று அனைத்து பராமரிப்புகளையும் பயன்படுத்தலாம்.

முகப்பரு: 

பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி ஆகும். இது அலர்ஜி எதிர்ப்பு மற்றும் அண்டிமிக்ரோபியல் பண்புகளையும் கொண்டிருக்கிறது. முகத்தில் அதிகப்படியாக இருக்கும் நச்சுக்கள், சருமத்துளைகள் அடைக்கப்பட்டிருக்கும் பாக்டீரியா, தொற்றுக்கள், கிருமிகளை அகற்றக் கூடியது. பூண்டில் இருக்கும் அலிசின் முகப்பருவை உண்டாக்கும். பாக்டீரியாக்களை அழிக்கிறது. சருமத்தில் இருக்கும் கெட்ட நச்சுக்களை வெளியேற்றுவதால் சருமம் பளிச்சென்று இருக்கிறது. பூண்டு  உடன் சில கிராம்பு  நறுக்கிய சாறு சேர்த்து அது முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி விடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது படிப்படியாக முகப்பருவை குறைத்துவிடும். 


சரும அலர்ஜி: 

சருமத்தில் உண்டாகக்கூடிய சொரியாசிஸ் பிரச்சினைக்கு பூண்டு உதவுகிறது. சர்மத்தில் செதில் உதிர்வு, தோல் அரிப்பு, உச்சந்தலையில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது சருமத்தில் வீக்கம் உண்டாகக் கூடும். அதனால் சரும தடிப்பு, அலர்ஜி போக்க பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பூண்டை பயன்படுத்துவதால் சருமத்தில்  ஏற்படும் அரிப்பு நிறுத்த முடியும். 


தழும்புகள் குறைய: 

வயிற்றில் அல்லது சருமத்தில் எங்கு தழும்புகள் இருந்தாலும் அதை போக்க பல வழிகளில் போராடி இருப்போம்.  ஆனால் வீட்டில் இயற்கையாக இருக்கும் பூண்டை வைத்து இந்த தழும்புகளை போக்க முடியும். கடுகு எண்ணெயுடன் பூண்டுச் சாறு கலந்து மிதமாக சூடேற்றவும். எண்ணெய்  பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது அதை தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வட்டமான வடிவில் மசாஜ் செய்யவும். இதை தினமும் செய்து வருவதால் தழும்புகள் இருக்கும் இடம் மறைய கூடும். கடுகு  எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலையும் சேர்க்கலாம். 


வயதான தோற்றத்தை தடுக்கிறது: 

வயதாகும் தோற்றம் நடுத்தர வயதிலேயே உண்டாகி விடுகிறது. பூண்டில்  இருக்கும் அலிசின் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் உண்டாகும் சருமத்தை பாதுகாக்க செய்கிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள்  ஏற்படாமலும் தடுக்கப்படுகிறது. பூண்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி குடிக்கவேண்டும். இது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.


சரும துளையை முடிகிறது: 

சரும துவாரங்கள் திறந்து நிலையில் இருப்பதால் அடுக்குகளில் அழுக்குகள் சேர்ந்து அவை முகத்தின் நிறத்தை மங்கச் செய்கின்றன. இந்த துளைளை குறைக்க பூண்டு உதவும். தக்காளியுடன் பூண்டு சேர்த்து மசித்து முகத்தில் தடவி உலர விடுங்கள். பிறகு முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இப்படி செய்து வருவதால் சருமத்தில் இருக்கும் துளைகளை மூட செய்கிறது.  சருமத்துளைகள் அதிகமாக இருந்தால் அதை பூண்டு மூடுவதற்கு பயன்படுகிறது.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil