சூரியை சந்தானம் மாதிரி ஆகிடாதீங்க என்று எச்சரிக்கும் ரசிகர்கள்!

சூரியை சந்தானம் மாதிரி ஆகிவிட வேண்டாம் என்று சினிமா ரசிகர்கள் சூரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெற்றிமாறன் படத்தில் சூரி நடிப்பதை பார்த்துவிட்டு தான் இவ்வாறு கூறியுள்ளனர்.சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படம் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

வெற்றிமாறன் படத்தை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார்.படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.அவர் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்து கொடுத்துவிட்டார்.படப்பிடிப்பு தற்போது காட்டுப் பகுதிகளில் நடந்து வருகின்றது.இந்நிலையில் இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானிஸ்ரீ நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


சூரி படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா தான் நடிப்பதாக முடிவுசெய்யப்பட்டது.குளிர் அதிகம் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதால் பாரதிராஜா பங்கேற்க முடியவில்லை.விஜய் சேதுபதி முதியவர் கதாபாத்திரத்தில் நடிப்பது அவரின் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.சூரி ஹீரோவாக நடிப்பதை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆனால் இந்த படத்திற்கு பிறகு இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கோட்பாடுகளை ஏற்க கூடாது என சினிமா ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

நகைச்சுவை நடிகராக கை நிறைய சம்பளம் வாங்கி முன்னணி ஹீரோக்களையே மூக்கின் மீது விரல் வைத்த சந்தானம் ஹீரோவானார்.அதில் இருந்து அவர் இனி நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்.அவர் மட்டும் ஹீரோவாக நடித்துக் கொண்டே பிற நடிகர்களின் படங்களில் காமெடி செய்தால் வாழ்க்கை பயணம் எங்கோ சென்றுவிடும்.ஆனால் அவரின் பிடிவாதத்தால் இப்படி ஆகிவிட்டார்.ஆகவே,சந்தானம் போன்று இருந்துவிடாமல் தொடர்ந்து காமெடியும் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் சூரியிடம் கோரிக்கைவிடுத்திருக்கின்றனர்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: latest news | trending news | celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | soori updates |