உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக ஃபேஸ் பேக் போடலாம் வாங்க.....

உருளைக்கிழங்கை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம். அதிலும் சருமத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தரும் என்பதை அறிந்திருக்கும். அதோடு கூட இந்த உருளைக்கிழங்கு நன்மை செய்கிறது. முகத்திற்கு உருளைக்கிழங்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து நாம் கேட்டிருப்போம் பார்த்திருப்போம். இப்போது உருளைக்கிழங்கை கொண்டு விதவிதமாக ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பு பற்றி தெரிந்து கொள்வோம். இவை உங்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும் என்பது பயன்படுத்திய பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். அதோடு இது கடினமானது அல்ல, எளிமையாகவும் தயாரிக்கக்கூடிய ஃபேஸ் பேக் தான்.

உருளைக்கிழங்கு, மாதுளை  மற்றும் தயிர்:

உருளைக்கிழங்கு சுத்தம் செய்து அதை தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மாதுளை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டாம். அப்படியும் இருக்கமாக இருந்தால் பால் அல்லது கெட்டித் தயிர் சேர்த்து அரைக்கலாம். எண்ணெய் பசை சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக குறைவாக மசித்த இந்த பேஸ்டை கெட்டியாகும் வரை ஃப்ரீசரில் வைத்திருங்கள். அரை மணி நேரம் கழித்து அதை வெளியில் எடுத்து வட்ட வடிவில் மசாஜ் போன்ற முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி தடவியபடி, 30 நிமிடங்கள் கழித்து முகத்தை சூடான நீரில் கழுவிக் கொள்ளுங்கள் முகம் மென்மையாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். முகத்தில் இருக்கும் கரைகள் வெளியில் தெரியாது. 


உருளைக்கிழங்கு மற்றும் வைட்டமின் இ ஆயில்:

உருளைக்கிழங்கின் சாரை மட்டும் எடுத்து தடவும்போது முகத்தில் முழுவதுமாக படவில்லை என்று நினைப்பவர்கள் இதை செய்து பார்க்கலாம். உருளைக்கிழங்கின் தோலை சீவி, அதை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு கத்தியை எடுத்து வைத்த உருளைக்கிழங்கின்  கீலை போட்டு வைத்தால் அதில் இருந்து வரும் அதன் சாற்றில் மீது வைட்டமின் ஈ ஆயிலை தடவி அப்படியே முகத்தில் வட்ட வடிவில் தேயுங்கள். குறிப்பாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருந்திட்டுக்கள், பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி கொண்டே இருக்க வேண்டும். வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தடவிக்கொண்டே இருந்து ஒரு பத்து நிமிடம் கழித்து மசாஜ் செய்து விட்டு பிறகு, முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். மெல்லிய துணியால் முகத்தை ஒற்றி எடுத்தால் முகத்தின் நிறம் வெண்மையாகும். 


உருளைக்கிழங்கு மற்றும் கற்றாழை: 

கற்றாலையை நீரில் அலசிக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கின் தோலை சீவி நறுக்கி அதனுடன் கற்றாழை ஜெல்லை சம அளவு எடுத்து மிக்சியில் அரைக்கவும் தண்ணீர் விட வேண்டாம். தேவை எனில் பன்னீர் சேர்த்து அரைக்கலாம். முகத்தில் எண்ணெய் பசை கூடுதலாக இருந்தால் இன்னும் எலுமிச்சை  கலந்து தேய்த்துக் கொள்ளவும். இது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி விடவும். 45 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் கூட செய்து கொள்ளலாம். இவை முகத்தில் இருக்கும் அதிகப்படியான வறட்சியை நீக்குவதோடு, சருமத்திற்கு ஈரப்பதத்தையும் அழித்து பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று வைத்திருக்க உதவுகிறது. 


உருளைக்கிழங்கு மற்றும் முட்டை: 

முகத்தில் ஏற்படும் பருக்கள், கட்டிகள் சில சமயங்களில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். இதற்கு உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் நீக்கி நீர் விடாமல் மசித்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி நன்றாகக் காயவிடுங்கள். 30 முதல் 45 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கட்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இப்படி செய்து வருவதால் முகத்தில் உண்டாகும் எரிச்சல், அரிப்பு நீங்கும்.


உருளைக் கிழங்கில் கிடைக்கும் நன்மைகள்:

உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் நார்ச் சத்து, மாவுச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து போன்ற பல வகையான சத்துக்கள் உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கிறது. உருளைக்கிழங்கு முகத்துக்கு பயன்படுத்தி வருவதால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்குகிறது. கண்களை சுற்றி வரும் கருமை போகும். கண் இரப்பையில் இருக்கும் வீக்கத்தை குறைக்கும். சருமத்துக்கு கிடைக்கும் இயற்கையான பிளீச்  உருளைக்கிழங்கு செயல்படுகிறது. உருளைக்கிழங்கு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான். உருளைக்கிழங்கு தினமும் பயன்படுத்தினால் முகத்தின் அழகை பெரிதும் நீங்கள் பார்க்கலாம்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil