தான் பெற்ற விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு!

பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தனக்கு வழங்கி கவுரவித்த விருதுகளை,திருப்பி தரும் முடிவில் இளையராஜா இருப்பதாக இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா கூறியுள்ளார்.நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் தான் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வருகின்றது.அந்த இடத்தில் தான் அவருடைய வெற்றிப் பயணம் தொடங்கி இருக்கிறது. ஆதலால்,இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான இடமாக அந்த ஸ்டூடியோ உள்ளது.

அதன்பின் பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்து இளையராஜா காலி செய்ய வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.இதனைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் - இளையாராஜா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து,தொடரப்பட்ட வழக்கு சமரச பேச்சுக்கு சென்றது.அதில்,முடிவு ஏற்படாததால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும், ஒலிப்பதிவு கூடத்தில், ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்,இளையராஜா வழக்கு தொடுத்தார். மேலும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் கோரி இருந்தார்.


இந்த வழக்கில் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா கூறியிருந்தார்.அதன்பின் இதனை ஏற்ற நீதிமன்றம்,ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி வழங்கியது.மேலும் இளையராஜா தியானம் மேற்கொள்ளவும், இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால் இளையராஜா பெற்ற விருதுகள்,அவரது உடமைகள் பலவும் குப்பை போன்று அங்கும்,இங்குமாக வீசப்பட்டு கிடந்ததால்,மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் இளையராஜா.

இந்நிலையில் இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் தினா செய்தியாளர்களை சந்தித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: “இசை கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் இளையராஜா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்த சந்திப்பு நடைபெற்றது.இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதி பற்றி ஒரு மாதம் கழித்து உங்களுடன் பேசுகிறோம். பிரசாத் ஸ்டுடியோ இடத்துக்காக இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்கிற செய்தி முற்றிலும் தவறானவை.

நாற்பத்தைந்து ஆண்டு காலாமாக இளையராஜா இசையோடு வாழ்ந்தது பிரசாத் ஸ்டுடியோ. முதல் நாள் மாலை ரெக்கார்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் காலை வழக்கம் போல சென்றார் உள்ளே நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்.இது எட்டு மாத காலமாக நீடித்தது. அதன் காரணமாகவே நீதிமன்ற உதவியை இளையராஜா நாடினார். நீதிமன்றம் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக இளையராஜா தரப்பில் ஆட்கள் சென்றபோது நாற்பத்தைந்து ஆண்டுகாலமாக அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள்,நோட்ஸ்கள் சேதாரப்படுத்தபட்டிருந்தன.மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விருதுகள் சேதப்படுத்தப்பட்டு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன. அவரை விரைவில் பெறுதலை எடுத்து செல்லுமாறு சற்று கால அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்.


தமிழ் சினிமாவின் உயரிய அமைப்புகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இசை கலைஞர்கள் சங்கம் அல்லது பெப்சி தலைமைக்கு தகவல் கூறி இருக்கலாம்.இப்படி எந்தவிதமான நாகரிகமான நடவடிக்கையை மேற்கொள்ளாத பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், இளையராஜாவை அவமானகரமாக வெளியேற்றியதை மத்திய, மாநில அரசுகள் மவுனமாக வேடிக்கை பார்த்தது.ஐம்பாதாண்டு காலம் இந்திய சினிமாவுக்கு தன் இசை பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தை பெற்று தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தன்னை கவுரவப்படுத்தி வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்பும் மனநிலையில் உள்ளார்” இவ்வாறு தினா கூறினார்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags:  latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | ilayaraja updates | music updates |