டிராகன் பழத்தை யூஸ் பண்ணா வயசான அறிகுறியே தெரியாதா?

டிராகன் பங்கள் அழகுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடிய பழம்.  நாம் பராமரித்துக் கொள்ள வேண்டும். டிராகன் பழங்களில் இவை மிக சிறந்த ஆக்ஸிஜனேறிகள்  உள்ளது. இது சருமத்தை அழகாகவும், இளமையாகவும் வைக்கவும் உதவுகிறது. வயதாவதை தடுப்பதற்கு இந்த பழம் மிகவும் உதவும்.

நம்முடைய சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இருந்தாலே சரும பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். டிராகன் பழத்தில் வைட்டமின்கள் பி3 மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நன்மை செய்யக்கூடிய வைட்டமின்கள். இது சரும கோளாறுகள் பலவற்றையும் நீக்கக் கூடியதாகவும் இதைக் கொண்டு சர்ம கோளாறுகளை எப்படி நீக்கலாம் என்று பார்ப்போம்.


முகப்பருவுக்கு மருந்தாகும்:

முகப்பருவுக்கு டிராகன் பழம் பயன்படுத்தலாம். இது வைட்டமின் சி கொண்டிருக்கிறது. இதனால் சருமத் துளைகள் மூடப்படுகின்றன. எப்படி பாதுகாக்கவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க முடியும். முகப்பரு இருப்பவர்கள் டிராகன் பழத்தை கொண்டு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம். உள்ளே இருக்கும் பழத்தை  வெளியே எடுத்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது சுத்தமான காட்டன் துணியை எடுத்து பேஸ்ட் தொட்டு முகத்தில் தடவுங்கள். காட்டன் மட்டும் மாற்றி மாற்றி பயன்படுத்த இது முகப்பருவை வெளியேற்றும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். 

வெயிலால் சரும பாதிப்பு: 

வெயிலால் நேரடியாக சருமம் பாதிக்கப்படும் போது அது முகத்தில் தீவிர சேதத்தை உண்டாக்குகின்றன. இதனால் புற ஊதாக் கதிர்களால் உண்டாகும் வீக்கம், முகத்தில் அரிப்பு போன்றவை உண்டாக கூடும். இதைப்போக்க ஃபேஷியல் செய்து கொள்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். இதற்கு  டிராகன் பழம் தான் உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி3 ஆனது வெயிலினால் சருமம் பாதிக்கப்படுவது குணமாக்கும். இந்த வைட்டமின் பி3 முகத்துக்குக் கூடுதல் பிரகாசத்தை தருகிறது. இதில் இருக்கும் சத்து வைட்டமின் இ  உடன் இணைந்து சருமத்தை பாதுகாக்க மேலும் உதவுகிறது.

வயதான தோற்ற அறிகுறிகளை தடுக்கும்: 

டிராகன் பழம் வயதான அறிகுறிகளை போக்கக்கூடியது. உடலில் வயதான தோற்றம் அறிகுறி உண்டாகிறது. இது வயதான பிறகு வரவேண்டிய தோற்றமாகும். இது இயற்கையானது. ஆனால் இளம் வயதிலேயே வருவதால் இதை தடுக்க டிராகன் பழம் உதவுகிறது.  டிராகன் பழம் இந்த வயதான தோற்றத்தை தடுக்கின்றன. பழக்கூழுடன் தயிர் கலந்து பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடலாம். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் வயதான தோற்றம் வருவததை தள்ளிப் போடலாம்.

வரட்சியைத் தடுக்கிறது: 

சருமத்தில் நீரோட்டம் இல்லாவிட்டால் சருமம் வறட்சியாக காணப்படும். வறட்சியை போக்குவதோடு குளிர் காலத்தில் கடுமையான வறட்சியிலும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. டிராகன் பல கூழுடன் தேன் கலந்து குழைத்து முகத்தில் பயன்படுத்தி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகம் வரட்சி அடைவதில்  இருந்து பாதுகாக்கலாம். டிராகன் பழத்தில் 80 சதவீதம் நீர் கொண்டுள்ளதால் இது வறட்சியான முகத்துக்கும் நன்மை செய்யக் கூடியதாகும். குளிர்காலத்தில் டிராகன் பழத்தை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. 


முகம் பிரகாசமாக இருக்க:  

டிராகன் பழம் வைட்டமின் சி கொண்டிருப்பதால் முகத்தை சோர்விலிருந்து மந்தமான தோற்றத்தில்  இருந்து விடுபட வைக்கிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சி ஆகவும் பிரகாசமாகவும் இருக்கும். எப்பொழுதெல்லாம் நீங்கள் ஓய்வாக இருக்கின்றீர்கள், அப்பொழுது ராகம் பழத்தை மசித்து முகத்திற்கு பயன்படுத்தலாம். இது இயற்கையான உணவாக இருப்பதால் சருமத்திற்கு அதிக நன்மை செய்கிறது.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil