புதிய கார் வேண்டுமா?.. குறைவான வட்டி தரும் வங்கி எது?.. எப்படி அந்த வட்டியை பெறுவது.... யாரெல்லாம் இதற்கு தகுதியானவர்கள்..!
கார் கடனிற்கு, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் இந்த நெருக்கடியான காலகட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் நடுத்தர வர்க்கத்து மக்களுக்கும் கார் வாங்க இது உதவியாக இருக்கும். நாம் இன்று பார்க்க இருப்பது குறைந்த வட்டியில் கார் கடனைகளை வழங்கும் வங்கிகளை பற்றித் தான் பார்க்க போகிறோம். சமூக இடைவெளி என்பது கொரோனாவிற்கு பிறகு மிகவும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பல மக்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணம் செய்யாமல் , குறைந்த பட்ஜெட்டில் கார்களை எடுக்க தொடங்கியுள்ளனர். இது குடும்பத்துடன் பயணம் செய்ய ஏற்ற ஒன்றாக இருக்கும்.
வட்டி விகிதம் குறைவு:
நாம் இன்று பார்க்க இருப்பது 10 வங்கிகளில் கார் லோனுக்கான வட்டி விகிதத்தினை பார்க்கவிருக்கிறோம். வருடத்திற்கு 7.10% ஆக பஞ்சாப் & சிந்த் வங்கியிலும், வருடத்துக்கு 7.25% ஆக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கனரா வங்கியில் வட்டி விகிதம் 7.30% வரையில் வசூலிக்கப்படுகிறது.
பிற வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு?
வருடத்திற்கு வட்டி விகிதம் 7.35% ஆக பேங்க் ஆஃப் பரோடாவிலும் , இதே யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வருடத்திற்கு 7.40% ஆகவும், 7.45% ஆக பேங்க் ஆஃப் இந்தியாவிலும் , பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் வருடத்திற்கு 7.50% ஆகவும், வருடத்திற்கு 7.50% ஆக ஐடிபிஐ வங்கியிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வருடத்திற்கு 7.55% ஆகவும் வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது



tag: personal finance | top-banks-offers | cheapest interest rate on car loan | car loan in best banks | top car brands in india | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil