வளரும் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க இளநீர் சாப்பிடுங்க!!!

வளரும் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் உணவுடன் சேர்த்து இளநீர் சாப்பிட வேண்டும் அதும் இயற்கையாக கிடைக்கும் இளநீரில்  சத்துக்கள் அதிகம் உள்ளது. தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் இரும்புச்சத்து சோடியம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகம் உள்ளன.

சருமத்தை பாதுகாக்கிறது:

வளரும் பிள்ளைகள் இளநீர் குடிப்பதால் சருமம் ஈரப்பதமாக இருக்கிறது இளநீரில் பாக்டீரியா எதிர்ப்பு ,நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

செரிமான மேம்பாடு:

இளநீரில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதில்லை இளநீர் குடிப்பதால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கு எந்த விதமான உடல் கோளாறுகளும் ஏற்படுவதில்லை.

கால்சியம்:

வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகும். நாம் இன்று எந்த பொருளை கொடுத்தால் சத்து அதிகம் இருக்கும் என்று தெரியாமலே ஆரோக்கியமற்ற உணவுப் பொருளை வாங்கிக் கொடுக்கிறோம் ஆனால் இயற்கையாக கொடுக்கும் உணவுப் பொருளை கொடுப்பதில்லை இளநீர் இயற்கையாக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று அவற்றில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது இதனால் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது.


தசைகளை வலிமையாக இருக்கிறது:

குழந்தைகள் நன்றாக விளையாடுவதற்கு தசைகள் வலிமையாக இருக்க வேண்டும் பிள்ளைகள் விளையாடும் போதெல்லாம் அடிக்கடி தடுக்கி விடுகின்றன இதனால் குழந்தைகளுக்கு தசைப்பிடிப்பு பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகிறது .உடலை வலிமையாக்க  இளநீர் கொடுக்க வேண்டும் அதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் தசைகளை வலிமையாக செய்கிறது.

நச்சுக்களை வெளியேற்றுகிறது: 

பிள்ளைகள் பெரும்பாலும் நொறுக்குத்தீனிகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் இதில் எண்ணெய் பொருட்கள் ,வறுத்த உணவுகள் ,அதிக இனிப்புகள்  இருக்கும். இதனால் அடிக்கடி குழந்தைகளுக்கு உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காய்ச்சல் வயிற்றுப் போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இளநீர் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதில்லை மேலும் இளநீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற செய்யும் ரத்த ஓட்டத்தையும் அவற்றின் அளவையும் சீராக மேம்படுத்த உதவுகிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil