தேவதை போல உங்களை ஜொலிக்க வைக்க அற்புதமான உலர் பழங்கள் பற்றி பார்ப்போம்.....

வளிமண்டலத்தில் இருந்து வரும் தூசுகள் சருமத்தை குளிர்காலத்தில் மேலும் மேலும் வரச்சியடையச் செய்கிறது. ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யும் பல பங்கள் இந்த காலத்தில்  தவிர்காமல் எடுத்துக் கொண்டால் தான் நீங்கள் மேலும் சருமத்தை எளிதாக  எடுத்துக்கொள்ள முடியும். உலர் பழங்கள் முழுமையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும். அத்தியாவசிய கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால் தான் சருமத்திற்கு சிறந்த முடிவை தரக்கூடியது. அதனால் குளிர்காலங்களில் முக்கியமாக சேர்க்கக்கூடிய 5 உலர் பழங்கள் பற்றி நாம் பார்க்கலாம்.

பாதாம்:

பாதாம் அத்தியாவசிய கொழுப்பு, அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தவை. பாதாம் உலர்ந்த பழங்களின் ராஜா என்றும் கூறப்படுகிறது. மேலும் துத்தநாகம், வைட்டமின்  , செலினியம் ஆகியவற்றின் சிறந்த இயற்கை பொருளாக எடுத்துக் கொள்ளும் போது இவை சருமத்தின் பொலிவை மிகவும் அதிகரிக்கச் செய்கிறது. இந்த பாதாமை ஃபேஸ் பேக்  பயன்படுத்தும் போதுதான் குளிர்கால நாட்களிலும் சருமத்தின் வறட்சி தடுக்கக் கூடியதாக இருக்கிறது. சருமத்தை மிகவும் மென்மையாக மாற்றுகிறது. பாதாம் எடுத்துக் கொள்வதோடு அதை பாலுடன் கலந்து ஃபேஸ் பேக் செய்து சுமார் 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பிறகு குளிர்ச்சியான நீரில் கழுவிக் கொள்ளுங்கள். கூந்தல் சிகிச்சைக்கும் சிறந்த பலனைத் தருகிறது.


வால்நட்: 

அக்ரூட் பருப்புகள் ஆரோக்கியமான கொட்டைகளில் ஒன்றாகும். இது குளிர் காலத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது. ஏனெனில் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது குளிர்காலத்தில் கூந்தலுக்கு மிகவும் நல்லது. அதிலும் வறட்சியான கூந்தல் இருப்பவர்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் செய்கிறது. தினசரி வால்நட் பருப்புகள் சாப்பிடுவதால் அது உடலையும், சருமத்தையும், கூந்தலையும் மேம்படுத்துகிறது. மிக முக்கியமானது வால்நட் சருமத்தை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைக்க உதவுகிறது. என்றும் இளமையுடன் இருக்கவும் செய்கிறது. இதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.


அத்திப்பழம்: 

அத்தி பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது. இது ஆக்சிஜனேற்றம் கொண்டே இருப்பதால் சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. அத்திப் பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தில் உள்ள மெலனின் உற்பத்தி செய்ய உதவுகின்றன. இதனால் சருமத்தின் மேல் அடுக்கு நீர் இழப்பு நேராமல் தடுக்கவும் செய்கிறது. மேலும் சருமத்தை சுத்தமாக வைத்திருப்பதால் வரட்சியான சருமம் இல்லாமல் அழகாகவும் பொலிவாகவும் இருக்கச் செய்கிறது. அத்திப்பழம் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமாக சரும சுருக்கங்களை குறைக்கவும் முடிகிறது. இது முகத்தில் இருக்கும் வடுக்களையும் கரும்புள்ளிகளையும் போக்க உதவுகிறது. தினமும் இரண்டு அத்தி பழம் சாப்பிடுவதன் மூலம் சரும பிரச்சனை நீங்கும். இயற்கை மாய்ஸ்சரைசர் என்று அத்தி பழத்தை சாப்பிடலாம்.


முந்திரி: 

குளிர்காலத்தில் முந்திரிப் பருப்புகள் மிகவும் சிறப்பானது. இது முடிக்கும் சருமத்திற்கும் அதிகப்படியான நன்மை தரக்கூடியது. இது வைட்டமின் சி, துத்தநாகம், மெக்னீசியம், செலினியம் மற்றும் இரும்புச் சத்துக்களை கொண்டு இருக்கிறது. இதை தினமும் அல்லது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் முகம் பிரகாசமாக இருக்கும். சேதமடைந்த செல்களை புதுப்பிக்க கூடிய திறமை கொண்டது. இது பிரகாசமான தோற்றத்தைத் தரக் கூடியது. இதில் இருக்கும் செம்பு மற்றும் பாஸ்பரசுடன் தலைமுடிக்கும் சிறந்த முடிவை தரக்கூடியவை. முந்திரியில் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் சருமத்திற்கு அதிசயங்களை செய்யக் கூடியது என்கிறது ஆய்வு.


பிஸ்தா: 

பிஸ்தா பருப்பு மிகவும் சுவையான ஒன்றாகும். இதை வைட்டமின்கள் மற்றும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் வைட்டமின் ஏ உள்ளது.  சருமம் நேரடியாக வெயில் படும்போது அல்ட்ரா வைலட் கதிர்கள் சருமத்தை பாதிக்கக்கூடும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வைட்டமின்கள் நிரம்பியுள்ள ஒரு பருப்பாகும். இது இளமையை தக்க வைக்கும் உதவுகிறது. வயதான நிலையை தடுக்கவும் உதவுகிறது. ஆண்ட்ரோஜன் அளவை குறைக்க செய்கிறது. முகப்பருவை வரவிடாமல் தடுக்க செய்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஐந்தையும் உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமானது.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil