அபராதம் இல்லையா?..ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்....!

முதலீடுகளில் வங்கிக்கு தான் இன்றைய காலகட்டத்தில் எப்போதும் முதலிடம். இதில் வட்டி மிக குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கம் இருக்காது.  குறைவான வருமானமாக  இருந்தாலும் நிரந்தர வருமானம் உண்டு.  இன்றைய காலக்கட்டத்திலும் இது  முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. முதிர்வு காலத்திற்கு பின்பு தான் பிக்ஸட் டெபாசிட்டுகள் கிடைக்கும் என்பது தான் இதில் உள்ள பிரச்சனை ஆகும் . ஆனால் சில வங்கிகளில் முன்கூட்டியேவும் எடுக்கும் வாய்ப்புண்டு. ஆனால் அதற்கும் அபாரதம் கொடுக்க வேண்டியிருக்கும்.

 

இப்படி முன் கூட்டியே வித்டிராவல் செய்யப்படும் தொகைக்கு வட்டியும் குறைவாக இருக்கும். எனினும்  சில வங்கிகள் இன்றைய காலகட்டத்தில் எந்தவித அபராதமும் விதிப்பதில்லை. தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஆக்ஸிஸ் வங்கியை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.

நீண்டகால சேமிப்பு:

டிசம்பர் 15க்கு பிறகு ஆக்ஸிஸ் வங்கியின் சில்லறை வாடிக்கையாளர்கள், டெபாசிட் செய்த ரீடெயில் டெர்ம் டெபாசிட்டுக்களுக்கு (retail term deposits) முன்கூட்டியே மூடுவதற்கான அபராதத்தினை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதனால் தீடீர் தேவை பற்றி இந்த வாடிக்கையாளர்கள்  கவலைப்பட வேண்டியதில்லை.  இவ்வங்கி தெரிவித்துள்ளது என்னவென்றால், இது நீண்டகால சேமிப்புக்கும் வழிவகுக்கும் என்றும்  தெரிவித்துள்ளது.
 

இதற்கு அபராதம் உண்டு?
  அனைத்து வகையான பிக்ஸட் டெபாசிட் மற்றும் தொடர்சியான வைப்புகளுக்கும் ஆக்ஸிஸ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.  2 வருட காலத்திற்கு மேலாக பிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்டால், அதனை 15 மாதங்களுக்கு பின்பு எடுத்தால் அபராதம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.


வட்டி விகிதம் எவ்வளவு?
  இந்தியாவின் மூன்றாவது தனியார் வங்கி ஆக்ஸிஸ் வங்கியாகும். இவ்வங்கியில் 2.5% முதல் 5.50% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.  கால வரம்பு 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை இந்த டெபாசிட்டுகளுக்கான கால வரம்பு வழங்கப்படுகிறது.  2.5% முதல் 6.05% வரை மூத்த குடிமக்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது.

புதிய அம்சம்:
 இதோடு மற்றொரு புதிய அம்சம் என்னவெனில் டெர்ம் டெப்பாசிட்டில் 25% வரை திரும்ப பெறுவதற்கு எந்த அபராதமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் என பல அம்சங்களையும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: personal finance | axis bank announces no penalty on premature closure of fds | axis bank | news in axis bank  |  Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil