நம் வீட்டில் வளரும் தாவரங்களைக் கொண்டு காற்றில் உள்ள மாசை எப்படி வடிகட்டுவது!!

காற்றில் அதிக மாசு படிந்து இருப்பதால் நிறைய பேருக்கு ஆஸ்துமா சுவாசக் குழாய் அழற்சி நுரையீரல் பாதிப்புகள் என நிறைய விஷயங்கள் ஏற்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் அளவானது அதிகரித்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் வாகனப்புகை தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் தீபாவளியின்போது பட்டாசு வகைகள் என நம்முடைய வழி மண்டலத்தையே இவைகள் பெருமளவில் பாதித்து வருகிறது. இதில் அதிகமாக காற்றில் உள்ள மாசுகளை சுத்தப்படுத்துவதில் தாவரங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.


வீட்டுத் தாவரங்கள்


காற்றில் உள்ள மாசுகளை கட்டுப்படுத்த ஒரே வழி நம்மை சுற்றி இருக்கும் காற்றை சுத்தப்படுத்துவதில் தான் இந்த நல்ல வேளை தான் தாவரங்கள் செய்து வருகின்றனர் இதில் முக்கியமாக இயற்கையிலேயே காற்றை சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ள செடிகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை அதிக அளவு ஆக்சிஜன் நிறைந்த காற்றை வெளியிடுகின்றன ஆக்சிஜன் நிறைந்த காற்று நம்முடைய இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது வெளியில் என்றால் மரம் வைத்துவிடலாம் அப்ப வீட்டிற்குள் இருக்கும் காற்றை எப்படி சுத்தப்படுத்த வேண்டும்,அதற்கு நாம் சில செடிகள் வளர்ப்பது அவசியமாகும்.

வீட்டிற்குள் வளர்க்கப்படும் தாவரங்கள்


அண்மையில் காற்றின் தரத்தை அளவிடும் சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் டெல்லி பெங்களூரு கொல்கத்தா புனே சென்னை ஹைதராபாத் மும்பை ஜெய்ப்பூர் முழுவதும் தீபாவளிக்கு முன்னும் பின்னும் காற்றின் தர தரவு குறித்த முழுமையான பகுப்பாய்வை ஆராய்ந்துள்ளது.இந்த ஆராய்ச்சியில் தீபாவளிக்கு முன்னும் பின்னும் சராசரியாக 250 க்கு மேல் சராசரியாக 75 டன் டெல்லி அதிகளவு மாசுபாட்டை பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சராசரி ஏகி உடன் 50-70 முதலும் சராசரி p.m. 2.5 வரை 25 க்கும் மேல் இருந்தது ஆனால் மும்பை புனே சென்னை கொல்கத்தா ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து அதிக அளவு மாசுபாட்டை காட்டி வருவதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.பிஎம் 2.5 உள்ளடக்கம் 200க்கு மேல் இருந்தது என்கிறார்கள் நிபுணர்கள் இது பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான வரம்பை விட இரண்டு மடங்கு அதிகம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வு உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள்.உங்கள் வீடு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய காற்று சுத்திகரிக்கும் உட்புற தாவரங்களை வளர்க்க வேண்டும் இந்த தாவரங்கள் நம் வீட்டில் நிலவும் காற்றை சுத்தப்படுத்தி நமக்கு தூய்மையான காற்றை வழங்கும்.

ஆர்கோ பாம்


நம் வீட்டில் அல்லது நமது தோட்டப் பகுதியில் ஆர் கோபம் என்பது பார்ப்பதற்கு சிறிய பனை மரம் போன்று காட்சியளிக்கும். இதை நம் தொட்டிகளிலும் அல்லது இதனை சூரிய ஒளி படும் இடத்தில் வளர்க்க வேண்டும்.இது பென்சீன் ஃபார்மால்டிஹைடு மற்றும்  கார்பன் மோனாக்சைடு போன்ற காற்றில் உள்ள நச்சுக்களை அழிக்கிறது. எனவே இந்த தாவரத்தை நம் நம் இல்லத்தில் வளர்ப்பது நன்மையளிக்கும்.

துளசி


துளசி இது இயற்கையாகவே சிறந்த ஒன்று விலை மலிவான தரம் எளிதில் கிடைக்கக்கூடியது காற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. எனவே இதை வாங்கி நம் வாழும் இடத்தில் வைத்து வளர்த்து வரலாம். இது ஒரு மருத்துவ மூலிகையாகும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன.

கற்றாழை தாவரம்


கற்றாழை வீட்டுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்ல நிறைய மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் இதில் உள்ளன.இது காற்றைச் சுத்திகரிக்கும் மற்றொரு தாவரம் ஆகும் இதை நிறைய நன்மைகள் தருகின்றது எனவே இதையும் நம் வீட்டில் அழகாக வளர்த்து வரலாம்.

மூங்கில் தாவரம்


இது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை கூட பம்ப் செய்ய உதவுகிறது. இவை பென்சின், ஃபார்மால்டிஹைடு போன்ற தீங்கு விளைவிக்கும் காற்று நஞ்சுகளை உறிஞ்சுகின்றன. இவற்றை கூட நம் வீட்டில் வளர்ப்பது நமக்கு நன்மை பயக்கும்.

மணி பிளாண்ட்


இதை வீட்டு முற்றங்களில் முன் பகுதிகளில் அழகுக்காக வளர்க்கின்றார்கள்.அது நம்முடைய ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களும் இருக்கின்றன. இவை பென்சீன், ஃபார்மால்டிஹைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் சைலீன் போன்ற காட்சிகளை அழிக்கின்றது.இதனால் நமது வீட்டில் இப்படிப்பட்ட செடிகளை வளர்ப்பதால் நமக்கும் நன்மை விளைவிக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை விளைவிக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:best indoor plants for clean air|best indoor plants for clean air philippines|air purifying indoor plants|indoor plants that clean the air and remove toxins|air purifying indoor plants india|nasa air purifying plants|best indoor plants for health|air purifying indoor plants with names.