வீட்டிலே இருக்கிற இந்த பொருள்களை எல்லாம்...எத்தனை நாளுக்கு ஒருமுறை எப்படி எல்லாம் சுத்தம் பண்றீங்க!!...

ஒவ்வொரு இல்லத்தரசிகளும் வீட்டை எப்போதும் சுத்தமாக வைக்கும் நமது இல்லத்தரசிகள் ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை பராமரிக்க நேரம் ஒதுக்கி இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான்.? இதனை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாமா? நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து தான் கிருமிகள் எளிதாக நம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவக்கூடும்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்து வந்தாலே நம் ஆரோக்கியத்திற்கும் நம் வீட்டில் உள்ள அனைத்து நபரின் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும்.அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள் என்றால் சீப்பு முதல் மிதியடி வரை பல பொருள்களை சொல்லலாம் அதிலும் மிகவும் அத்தியாவசியமான பொருட்களை சுத்தம் செய்வதில் இருந்து தொடங்குவோம்.


சீப்பு


சீப்பு எப்போதும் நம் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது.இதிலும் பெண்கள் முதல் சிறியவர்கள் வரை மற்றும் பெரியவர்கள் வரை அனைவருமே தனக்கென்று தனித்தனி சீப்பு என பயன்படுத்தி வருகின்றோம் இதிலும் உடைந்த பொடுகை விரட்ட அழுக்கு நீக்க என்று தனித்தனி சீப்புகளை பயன்படுத்தி வருகின்றோம். நம் கூந்தலை பராமரிக்க கூந்தல் நீளமாக வளர வேண்டும் என்று சீப்பை வாரம் ஒருமுறை கழுக வேண்டும் வெளியில் செல்பவர்கள் அதிக அழுக்கு இருந்தால் ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பிறகும் சீப்பை பயன்படுத்துங்கள் இல்லையெனில் சரும பிரச்சனைகள் வரவே செய்யும்.

எப்படி என்பதை பார்க்கலாம்

சோப்புத்தூள் கலந்த நீரில் எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு பிரிந்து சீப்பு மூழ்கும் வரை நீர் விட்டு அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் பிரஷ்ஷோடு போராட வேண்டிய தேவையில்லை.

தலையணை உறை



தலையணை உறையை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி துவைக்க வேண்டும் படிந்து இருக்கும் அழுக்குகள் அல்லது காய்ச்சலாக இருக்கும் போது சளி பிடித்து இருந்தால் அதிலிருக்கும் கிருமிகள் வெளியிலிருந்து வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே.நாம் உபயோகப்படுத்தும் தலையணை உறைகளை வாரம் ஒரு முறை சோப்பு நீர் கொண்டு அதில் டெட்டால் கலந்து படுக்கை விரிப்புகளை துடைக்கவேண்டும் குறிப்பாக வயதானவர்கள் குழந்தைகள் பயன்படுத்தும் முறைகள் மேலும் காய்ச்சலின் போது பயன்படுத்திய தலையணையை உடனடியாக துவைப்பது நமக்கும் நமது வீட்டில் இருக்கும் நபருக்கும் ஆரோக்கியமானதாகும்.

எப்படி என்று பார்க்கலாம்

தலையணை உறையை துவைக்கும்போது தலையணையை அப்படியே வெயிலில் காய வைத்து இருபுறமும் தட்டி திருப்பி திருப்பிப் போட்டு எடுங்கள் கிருமிகள் வெயிலில் அடியோடு அழிந்து விடும் வாரம் ஒரு முறை இல்லை என்றாலும் மாதம் ஒரு முறையேனும் கண்டிப்பாக அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக வெயிலில் போட்டு எடுங்கள்.

திரைச்சீலைகள்



நம் வீட்டில் இருக்கும் ஜன்னல்கள் கதவுகள் மாட்டியிருக்கும் திரைச்சீலைகள் அதிகப்படியான கிருமிகளை கொண்டிருக்கும் இதில் குறிப்பாக வாயிலில் மாட்டியிருக்கும் திரைச்சீலைகளை வெளியிலிருந்து நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் கைகள் பட்டு அழுகை அதிகமாக கொண்டிருக்கும் இதனால் இதனை வெயிலில் காய வைத்து 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இதை கடைபிடிக்க வேண்டும்.இதில் முக்கியமாக வெளியே இருக்கும் ஸ்க்ரீன் போன்ற துணிகளை துவைக்கும் போது நன்றாக உதறி தூசி தட்டிய பிறகு வெந்நீரில் ஊறவைத்து வையுங்கள் இல்லை என்றால் அதில் இருக்கும் அழுக்குகள் தண்ணீர் மேலும் கெட்டியாக பிடித்துக்கொள்ள கூட அதோடு வருடத்துக்கு ஒருமுறை புதிய ஸ்கிரீன் துணிகளை பயன்படுத்துங்கள்.

தண்ணீர் பாத்திரங்கள்


நான் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பாட்டில்கள் பிடித்து வைக்கும் குணங்கள் கேன்கள் எதுவாக இருந்தாலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது நீரில் நமக்குத் தெரியாமல் பேட்டரி அக்குள் போன்ற பூஞ்சைகள் பிடிக்க நேரிடும். நாம் உபயோகப்படுத்தும் கேன்கள் குடங்கள் போன்ற பொருள்களை கழுவாமல் இருந்தால் காய்ச்சல் எளிதாகவரக்கூடும் இதனால் தொண்டை அலர்ஜி தொண்டை புண் போன்ற பிரச்சினைகளை உண்டு செய்யும் அத்தோடு நம் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் வாட்டர் பாட்டில்களையும் கூட சுத்தம் செய்யுங்கள்.

குப்பை சேகரிக்கும் தொட்டி


அன்றாட கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றுவதுதான் சுகாதாரத்தின் முதல்படி என்று சொல்லலாம்.அன்றாட பயன்பாட்டில் தேவையற்ற பொருளை சேகரிக்கும் இடமாக இருக்கும் குப்பைத்தொட்டியை சமையலறையிலும் வைத்திருக்கிறோம்.குப்பைக் கூடை தானே என்று அழுக்குகள் நிரம்ப நிரம்ப மீண்டும் அதிலேயே கொட்டி வைப்பது தான் அதிகம். வீடுகளுக்கு சுத்தமாக இருந்தாலும் ஒட்டுமொத்த  கூடாரமாக மாறி விடுகிறது இந்த குப்பை தொட்டி தான்.

எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்

கழிவுகளை குப்பைத் தொட்டியில் நேரடியாக கொட்ட வேண்டாம். அதற்கென பாலிதீன் கவரை வாங்கி அதில் போட்டு அதில் கழிவுகளைக் கொட்டி விடுங்கள் தினமும் காலையில் அந்த கவரை கட்டி குப்பைத்தொட்டியில் போடுங்கள் வாரம் ஒருமுறை கூடையை கழுவுங்கள்.காய்கறி கழிவுகள் இருந்தால் தோட்டம் வைத்திருப்பவர்கள் அந்த கழிவுகளை செடியின் கொட்டி விடுங்கள் குப்பை தொட்டியில் வைக்காமல் இருந்தால் பூச்சிகளின் நடமாட்டம் இருக்காது என்பது கூடுதலான சிறப்பு.

கால் மிதியடி


நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு அறையின் வாசலிலும் போடப்பட்டிருக்கும் மிதியடி கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டியது நம் ஆரோக்கியத்தின் மற்றொரு பலனாகும்.அன்றாடம் நாம் வெளியில் இருந்தும் வரும் கழிவுகளும் கழிவறை கருவிகளும் உண்டாக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அளவிட முடியாதவை ஆகும் தினசரி மாற்ற வேண்டும் என்றாலும் அது நிச்சயம் எல்லோருக்கும் கை கொடுக்காது அதனால் வாரம் இருமுறை மாற்றிவிடுங்கள்.

எப்படி

நம் வீட்டில் பயன்படுத்தும் மிதியடிகளை கிருமிநாசினி கொண்டு அதை வெந்நீரில் நன்றாகக் குழைக்க வேண்டும் இதற்காக பிரத்யேக பிரஷ் பயன்படுத்துவது கிருமிகள் வேறு துணியில் பரவாமல் தடுக்கலாம் தண்ணீரில் பயன்படுத்தக்கூடிய மிதியடிகளை வீட்டில் பயன்படுத்தும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:how to clean house fast|how to clean a house professionally|clean house tips|how to clean a house professionally checklist|how to clean your house in one day|what order to clean your house|how to deep clean house fast|how to clean the house in an hour.