மூலிகை கரைசல் கம்பளிப் பூச்சியை அழிக்குமா!! வராமலும் தடுக்க இதோ பயன்னுள்ள குறிப்பு ...

வீட்டில் வளர்க்கும் வீட்டு தோட்டம் ஆக இருந்தாலும் சரிஅல்லது வீட்டில் வளர்க்கும் செடி கொடிகள் இருந்தாலும் சரி நமக்கு ஏற்படும் நாம் பயமே, அந்த மரத்தில் பற்றி விடும் பூச்சிகள்தான் பெரும்பாலும் மரங்களின் சத்தை உறிஞ்சி எடுக்க செய்யும், வீட்டில் நுழைந்து பாதிப்பை உண்டாக்குகிறது. பூச்சி வகைகளில் முக்கியமானது கம்பளிப்பூச்சி,அவை பார்ப்பதற்கு அருவருப்பாகவும் மேலும் அது பெரும்பாலும் முருங்கை மரங்களில் தான் அதிகமாக பற்றியிருக்கும் முருங்கை மரம் நமக்கு அதிகமாக பலன் தர கூடியதாக இருந்தாலும் அவ்வகையான பூச்சிகள் அதிகமாக இருப்பதனால் நமது மனங்களில் பயமும் இதனால் நமது சருமத்தில் ஏற்படும் பாதிப்பையும் நினைக்க தூண்டுகிறது.கம்பளிப் பூச்சியைப் பார்க்கும்போதே பலருக்கும் ஒரு விதமான அரிப்பெடுக்கும் உதாரணம் கூட கம்பளிப்பூச்சி போன்று அறிவிப்பு என்றுதான் பலரும் சொல்வார்கள் உண்மையில் சிலருக்கு இது சருமத்தில் பட்டால்சிலருக்குத் தோல் முழுக்க சிவப்பையும் தடிப்பையும் உண்டாக்கிவிடும் இருக்கும் இடம்தான் இதனை தடுக்க நமது இல்லத்தரசிகள் தெரிந்து கொள்வது நல்லது.

வேப்பிலை மூலிகை புகை...

கம்பளி பூச்சியை அழிப்பது என்பது சுலபமான காரியம் இல்லை நாம் ஆசையாக வளர்க்கும் முருங்கை மரத்தின் மீது அங்கங்கு பற்றி இருப்பதினால் ஒரு மரத்தை அழிக்கக்கூட வாய்ப்பு ஏற்படும்.கம்பளிப்பூச்சி அழிப்பது என்பது ஒரு கடுமையான காரியமாக பலருக்கும் இருக்கும் இதனால் சிலரும் அதை தீப்பந்தத்தை மூட்டி அதை அழிக்க நேரிடும். இதனால் முருங்கை மரம் வீணாக கூட போக வாய்ப்புண்டு. நம் வீட்டில் வளர்க்கும் செடிகள் மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி கால் அடிக்கு பள்ளம் தோண்டி கொள்ளவும்.தோண்டிய இடத்தில் காய்ந்த சருகுகள் ஓலைகள் குச்சிகள் அல்லது தீப்பிடித்து எரிய விடவேண்டும் நன்றாக எரியும் போது கைப்பிடி வேப்பிலையை பச்சையாகவும் அல்லது காய்ஞ்ச இலை சேர்த்து புகையை மூடவும்.இந்த நெருப்பு மிதமாக எரிய வேண்டும் குறிப்பாக 15 நிமிடங்கள் வரை மிதமாக இருந்தால் போதும் இதே போன்று இந்த புகையை காலை மாலை என இரண்டு வேளையும் இப்படி செய்து வந்தால் கம்பளிப்பூச்சி வேரோடு அழியும்.இந்த மிதமான நெருப்பு நாம் வளர்க்கும் செடியை எந்த சேதமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.

சோப்பு தண்ணீர்


இந்த செய்முறை எப்போதும் நாம் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு செயல்முறைதான். மரங்கள் மீது அட்டை போல் ஒட்டி இருக்கும் கம்பளிப்பூச்சியை அழிப்பதற்கு பயன்படுத்தலாம்.
நம் துணிக்கு பயன்படுத்தும் எந்த பவுடராக இருந்தாலும் சரி அதனை ஒரு தேவையான அளவு எடுத்துக்கொண்டு அந்த நீரை அப்படியே கம்பளிப் பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஊற்றவும். கம்பளி பூச்சிகள் அதிகமாக இருக்கும் இடத்தில் கொண்டு தெளிக்கவும்.

 பெருங்காய மஞ்சள் கரைசல்...

ஒரு பாத்திரத்தில் 200 கிராம் அளவுக்கு விரலி மஞ்சளை அரைத்து ஒரு லிட்டர் நீரில் கரைத்து கொதிக்கவிடவும் மற்றொரு பாத்திரத்தில் கால் லிட்டர் நீருடன் 50 கிராம் அளவு கட்டி பெருங்காயம் சேர்த்து இறக்கி ஆற விடவும்.
இதனை இரண்டு பங்கு நீர் சேர்த்து செடி மரங்களின் மீது தெளித்து விட்டால் கம்பளிப்பூச்சி எப்போதும் வராமல் இருக்கும். இதனால் வீட்டில் வளரும் மற்ற செடிகளின் மீதும் பூச்சிகளும் வராது.

பப்பாளி இலை கரைசல்..

 பப்பாளி மரத்தின் இலையை எடுத்து ஒரு கப் அளவுக்கு நீர் சேர்த்து அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றவும். நாம் பப்பாளி இலையை நீரில் ஊற வைக்கும்போது அதன் இதழ்கள் மென்மையாக கூடும். இதை நாள்முழுக்க அல்லது குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். அதில் நேரில் சேர்க்காமல் அப்படியே ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நம் வீட்டில் வளர்க்கும் செடி கொடிகளின் மீது தெளிக்க வேண்டும் இதனை மூன்று வேளை தினமும் செடியின் மீது பரவலாக தெளித்தால் பூச்சிகள் அண்டாது. இதனை வேப்ப இலைகளை கொண்டும் கம்பளி பூச்சி விரட்டி அடிக்கலாம். இது நமக்கு கடினமான வேலையாக இருக்கும்.ஆனால் பெரிய தோட்டங்கள் வைத்திருப்பவர்களுக்கு இந்த முறைகள் பலன் கொடுக்கும்.இந்த செய்முறைகளை கண்டு கம்பளிப்பூச்சியை அடியோடு விரட்டி அடிக்கலாம்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:blanket worm life cycle|kambalipoochi life|kambli poochi kadi marunthu|blanket worm remedies|kambli poochi medicine in tamil|how to get rid of blanket worm in home