செலவே இல்லாமல் கிராமங்களுக்கு பிராட்பேண்ட், வைஃபை சேவை..! ரெயில்டெல்-ன் சூப்பர் திட்டம்..!!

ரெயில்டெல் நிறுவனம் என்பது இந்திய ரயில்வே துறையின் மார்டன் ரயில் கன்ட்ரோல் ஆப்ரேஷன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான பிராட்பேண்ட், டெலிகாம், மல்டிமீடியா நெட்வொர்க்-ஐ அளிக்கும் மிகவும் முக்கியமான நிறுவனம் ஆகும் . தற்போது இந்திய ரயில்வே துறை இந்த நிறுவனத்தின் வாயிலாகத் தான்  பல டெக் மற்றும் டெலிகாம் முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.  ரெயில்டெல் நிறுவனம் இந்திய கிராமங்களுக்கும், டெலிகாம் சேவைகள் முழுமையாகக் கிடைக்காத இடங்களுக்கும்  பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவைகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இது சூப்பர் திட்டமாக உள்ளது.

 

ரெயில்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் மற்றும் வைபை சேவை :

 அதிவேக இண்டர்நெட் சேவைக்குப் பயன்படுத்தப்படும்  பைபர் ஆப்டிக் கொண்டு, ரெயில்டெல் நிறுவனமானது  இந்தியாவில் சுமார் 5,900 ரயில் நிலையங்களில் இண்டர்நெட் மற்றும் டெலிகாம் சேவைகளை அளித்து வருகிறது. இதில் ஊரகப் பகுதிகளில் பெரும்பாலானவை  இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது, இதை அடிப்படையாக வைத்து ரெயில்டெல், இந்தியாவில் இருக்கும் கிராமங்களுக்குப் பிராட்பேண்ட் மற்றும் வைபை சேவை அளிக்கத் திட்டமிட்டு வருகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் ரயில்வே துறை, டெலிகாம் சேவை :

  நாட்டைப் போக்குவரத்து மூலம் இணைக்கும் ரயில்வே துறை, டெலிகாம் சேவை வாயிலாக மக்களையும் இத்திட்டம் ஒப்புதல் பெரும் பட்சத்தில் இணைக்க முடியும்.  இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் கிராமங்களும், ஊரகப் பகுதிகளும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பின்தங்கியுள்ளது.  மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரெயில்டெல்-ன் இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவை:

  தொலைத்தொடர்புத் துறை எவ்விதமான ஒப்புதலும், அறிக்கைக்குப் பதிலும் இதுவரையிலும்  அளிக்கவில்லை. இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த உடனேயே ரெயில்டெல் நிறுவனம் பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவையை வழங்குவதற்கான பணிகளை துவங்கிவிடும்.

அரசு நிறுவனமான ரெயில்டெல் நிறுவனத்திற்கு  ஜாக்பாட்:

  அனைத்து விதமான டெலிகாம் சேவை தளமும் ஏற்கனவே இருக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தால் எளிதாக விரிவாக்கம் செய்துவிட முடியும்.   இதனால் பெரிய அளவிலான செலவும் ரெயில்டெல் நிறுவனத்திற்கு இல்லை. மேலும்  அரசு நிறுவனமான ரெயில்டெல் நிறுவனத்திற்கு இது ஜாக்பாட், ஏனென்றால் புதிய சேவை மூலம் புதிய வருமானமும் கிடைக்கும் என்பதால் .

 

பல கிராமங்களுக்கு டெலிகாம் சேவை:

இந்தியாவில் பல கிராமங்களுக்குச் சரியான டெலிகாம் சேவை இல்லாமல் இருக்கிறது ஏனென்றால்  தனியார் நிறுவனங்கள் டெலிகாம் துறையில் ஆதிக்கம் செலுத்தினாலும் வருமானம் குறைவாகக் கிடைக்கும் காரணத்தாலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தாலும் கிராமங்களுக்கு டெலிகாம் சேவை கிடைக்காமல் உள்ளது.  ஒரு பொதுத்துறை நிறுவனத்தால் மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பதை ரெயில்டெல் நிறுவனம் நிரூபணம் செய்துள்ளது.

 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: telecom service | wifi service | protpantn | railtel planning to give broadband wifi services in remote areas in india  |  Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil