சிம்புவின் 'பத்து தல' படத்தின ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்!..

சிம்புவின் ’பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சுசீந்திரன் இயக்கி, சிம்பு நடித்து வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கின்றார். மேலும் நந்திதா ஸ்வேதா, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் நடித்திருக்கின்றனர் .பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இந்த படம், அதையெல்லாம் கடந்து பொங்கலுக்கு வெளியாகியது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஈஸ்வரன் படம் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு சிம்பு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்துக்கு பல்வேறு விமர்சனங்களும் கிடைத்திருக்கின்றனர்.ஈஸ்வரன் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.20 லட்சம் வசூல் கிடைத்திருக்கிறது.இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்சனைகளும் அந்தப் பிரச்சனைகளைஅவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை களம்.


இத்திரைப்படத்தை அடுத்து மாநாடு படத்தில் நடித்து வருகின்றார்.இந்ததிரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா,எஸ்.ஏ.சந்திரசேகர்,பிரேம்ஜி,கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ் பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இந்த படத்தை, 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா இயக்க இருக்கிறார்.கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'முஃப்தி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட உள்ள படம் 'பத்து தல' . இத்திரைப்படத்தில் முதல் முறையாக சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த நிலையில் நேற்று வெளியான தகவலின்படி ’பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 18ஆம் தேதி  அதாவது இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படத்தை நாளை மாலை 6.30 மணிக்கு, இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் வெளியிடுவார் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது.இதற்கு முன்பு பொங்கல் விருந்தாக சிம்பு ரசிகர்களுக்கு ’ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாகி இருக்கும்  இந்நிலையில்,தற்போது இந்த அறிவிப்பு பொங்கல் சிறப்பு விருந்தாக சிம்பு ரசிகர்களுக்கு இருக்கும் என கருதப்படுகிறது.அதுமட்டுமல்லாது பிரபல இயக்குநர் சுதாகொங்கரா இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | simbu updates | popular topics | cinema updates | silambarasan movie updates |