கணிப்பை விடவும் அதிக லாபம் கண்ட HDFC வங்கி....!

தனியார் வங்கி நிறுவனமான ஹெச்டிஎப்சி வங்கி இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகும். இவ்வங்கி டிசம்பர் காலாண்டில் சுமார் 18.1 சதவீத அதிக லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது.    இதன் மூலம்  இவ்வங்கியின் டிசம்பர் மாத காலாண்டில் மொத்த லாப அளவீடு 8,758.3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.    15.1 சதவீதம் இவ்வங்கியின் மொத்த வட்டி வருமானமாகவும்  வளர்ச்சி அடைந்து 16,317.6 கோடி ரூபாயை வட்டி வருமானத்தை பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அளித்தது என்னவென்றால் சந்தை கணிப்புகளை விடவும் இவ்வங்கியின் லாபம் மற்றும் வட்டி வருமானம் அதிகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அளித்துள்ளது.

 

0.8 சதவீதமாக ஹெச்டிஎப்சி வங்கியின் வாராக் கடன் விகிதம் உள்ளது. இது  0.4 சதவீதமாக ஐசிஐசிஐ வங்கியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்பு வாராக் கடன் சொத்து மதிப்பு செப்டம்பர் காலாண்டில்  0.17 சதவீதம் அளவாக இருந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் 0.09 சதவீதமாகக் குறைந்துள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.   ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த வாராக் கடன் அளவு, உத்தரவைக் கருத்தில் கொள்ளவில்லை எனில் டிசம்பர் காலாண்டு முடிவில் 1.38 சதவீதமாக உள்ளது.  ஹெச்டிஎப்சி வங்கியில் இக்காலாண்டில் வைப்பு நிதியின் அளவீடு கடந்த வருடத்தை விடவும் 19 சதவீதம் அதிகரித்து 12.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இவ்வங்கியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும், இவ்வங்கியின் வர்த்தக விரிவாக்கம் செய்யக்கூடிய அளவீட்டையும் கணிக்க முடிகிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: hdfc-bank | q3 profit rises |  hdfc netbanking | hdfc bank private limited | hdfc bank recruitment 2020 |  Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil