ஆன்லைன் மூலம் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாமா..? எப்படி வாங்குவது..?

டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு தூய ஆயுள் காப்பீட்டுக் திட்டம் ஆகும்.   ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரண்டு தளங்களிலும் இதை நீங்கள் வாங்கலாம்.  இந்தக் காப்பீடு திட்டத்தை ஆஃப்லைன் தளத்தில் வாங்க ஒரு முகவர் அல்லது தரகரின் சேவை உங்களுக்குத் தேவைப்படும். ஆன்லைனில் இதை எவ்வாறு மிக எளிதாக வாங்குவது என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

 

வலைத்தளத்தின் மூலம் ஆன்லைன் பிளான்:

   ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரின் வலைத்தளம் அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் வலைத்தளம் மூலம் ஒரு ஆன்லைன் டெர்ம் ப்ளானை வாங்க முடியும். காப்பீடு திட்டங்களின் ஒருங்கிணைந்த வலைத்தளம், நன்மைகள், ரைடர்ஸ் மற்றும் பல்வேறு காப்பீட்டாளர்களின் பிரீமியம் வாடிக்கையாளருக்கான விதிமுறைகள் ஆகியவற்றை ஒப்பிடுவதற்கு அனுமதிக்கும்.

வாடிக்கையாளர்களின் அடிப்படையான விவரங்கள்:

 வலைத்தளத்தில் பூர்த்திச் செய்ய வேண்டிய விவரங்கள் என்னவென்றால் வாடிக்கையாளர் பெயர், பிறந்த தேதி, தொடர்பு விவரங்கள், புகைபிடித்தல் பழக்கம், உங்களின் அடிப்படை வருவாய், நீங்கள் எதிர்பார்க்கும் ஆயுள் காப்பீடு தொகை போன்ற அடிப்படை விவரங்களை வலைத்தளத்தில் பூர்த்திச் செய்ய வேண்டும். இந்த அடிப்படையான விபரங்களை  பூர்த்தி செய்யப்பட்ட  பின்னர், உங்களுக்கான காப்பீடு திட்டங்களின், அம்சங்கள், சலுகைகள் மற்றும் பிரீமியம் ஆகியவற்றுடன் உங்களுக்குப் பொருத்தமான டேர்ம் ப்ளான் காட்டப்படும். அனைத்து பாலிசியின் அம்சங்களையும் பார்வையிட்ட பின்னர், ஒரு வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான திட்டத்தை வலைத்தளத்தில் க்ளிக் செய்வதன் மூலம் பரிந்துரைக்கலாம்.

 

பிரீமியம் ஆன்லைன் மூலம் செலுத்துதல்:

 வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான திட்டத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர்,  அந்தத் திட்டத்திற்கான ப்ரீமியத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.  வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த கால இடைவேளிப்படி கட்டண முறை இருக்கும். கட்டணத்தை வெற்றிகரமாகச் செலுத்திய பின்னர், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு உறுதிப்படுத்தும் தகவல் அனுப்பப்படும்.

முன்மொழிவு படிவம்,தனிப்பட்ட விவரங்கள் :

 வாடிக்கையாளர், பிரீமியம் செலுத்தப்பட்டவுடன் ஒரு விரிவான ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கான முன்மொழிவு படிவத்தை நிரப்ப வேண்டும். வாடிக்கையாளரின் வசம் இருக்கும் காப்பீடு தொகை, தனிப்பட்ட விவரங்கள், சுகாதார விவரங்கள் போன்ற அடிப்படைத் தகவல்களை அந்தப் படிவத்தில் நிரப்பபட  வேண்டும்.

ஆவணங்கள்:

 முன் மொழிவு படிவத்தை நிரப்பிய பின்னர், வாடிக்கையாளரின் அடையாள அட்டை, சுகாதாரத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள், முகவரி ஆதாரம்  போன்றவற்றைப் பதிவேற்ற வேண்டும். வாடிக்கையாளருக்கு, பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல் படிவத்தைப் பூர்த்திசெய்யும் பொழுது வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

 

மருத்துவப் பரிசோதனை:

வாடிக்கையாளர் காப்பீடு நிறுவனத்தால் கட்டாயப்படுத்தப்பட்டால்,  அந்த நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ மையத்தில் ஒரு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்திடம், அந்த மருத்துவ மையம் மருத்துவ அறிக்கையை அனுப்பிவிடும்.

 

ஆயுள் காப்பீட்டு பத்திரம்:

 வாடிக்கையாளரின் மருத்துவ அறிக்கை  மற்றும் முன்மொழிவு வடிவம்  சரிபார்ப்பின் பின்னர்க் காப்பீட்டு நிறுவனம் ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தை வெளியிடலாமா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். காப்பீடு திட்டம் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டால், காப்பீட்டை உறுதிப்படுத்தும் மற்றும் கொள்கை ஆவணங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: how buy term insurance policy through online | term insurance policy  | online insurance policy | life insurance policy |  Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil