'மாஸ்டர்' திரைப்படம் 100 கோடி வசூலித்து சாதனை!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்தனர்.மேலும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன்,சாந்தனு,அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இத்திரைப்படம், கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி மாஸ்டர் வெளியாகியது.'மாஸ்டர்' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

தெலுங்கில் ஆந்திரா,தெலங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியான இப்படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு இருந்ததாக படத்தின் தெலுங்கு வினியோகஸ்தரான மகேஷ் கொனேரு அறிவித்திருக்கிறார்.தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடியே 'மாஸ்டர்' வெளியாகி இருக்கிறது.தற்போது மாஸ்டர் படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. குறிப்பாக, 'மாஸ்டர்' படக்குழுவினரைப் பாராட்டி சினிமார்க் மற்றும் ஏ.எம்.சி திரையரங்க நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றனர்.இந்தக் கடினமான காலகட்டத்தில் எங்களுக்குப் பொக்கிஷமாகப் படம் கொடுத்து உதவி புரிந்தமைக்கு நன்றி. இந்தச் சிரமமான காலகட்டத்தில் இவ்வளவு காலம் காத்திருந்து திரையரங்க வெளியீட்டை மட்டுமே முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ளதற்கும் மிக்கநன்றி என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும்  'மாஸ்டர்' திரைப்படம், இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது.தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.இது தொடர்பாக எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறியிருப்பது: ‘மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை கவருமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும், மாஸ்டர் வெளியான 2 நாட்களில் மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.43 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது.வெளியான 24 மணி நேரத்தில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது மாஸ்டர் திரைப்படம். இரண்டாவது நாளில் மாஸ்டர் திரைப்படம் தமிழகம் முழுவதும் ரூ.18 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.1.21 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.1.05 கோடியும் வசூல் ஆகியுள்ளது. 2 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.43 கோடியை வசூலித்து மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படம், உலக அளவில், வெற்றிகரமாக, சுமார் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. மாஸ்டர் படம் வெளியாகி மூன்றே நாட்களே ஆன நிலையில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.இதற்கு முன் தளபதி விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில் உள்ளிட்ட படங்களும் 100கோடி வசூலை ஈட்டித் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: | trending news | popular news | movie updates | vijay updates | latest news | interesting news | kollywood news | daily updates | recent updates | master movie updates | cinema updates | tamil cinema updates | trending topics | famous updates |