விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்தாக 'உப்பெனா' போஸ்டர் வெளியீடு!

விஜய் சேதுபதியின் பிறந்த நாளை ஒட்டி, உப்பெனா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்.டிருக்கிறது.தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, இன்று அவர் தன்னுடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.இதனால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #HBDVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தற்போது இந்நிலையில் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு படக்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.


இதனால் தெலுங்கு ரசிகர்களும், போஸ்டரை ரீ-ட்வீட் செய்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.விஜய் சேதுபதி தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.இதையடுத்து சிரஞ்சீவியின் உறவினரான பாஞ்சா வைஷ்வன் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'உப்பெனா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இந்திய தெலுங்கு மொழி திரைப்படமான உப்பேனா புச்சி பாபு சனா இயக்குகிறார்.சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் மித்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றது.

இப்படத்தில் அறிமுக வீரர்களான பஞ்சா வைஷ்ணவ் தேஜ் மற்றும் கிருதி ஷெட்டி ஆகியோரும் உள்ளனர்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.ஷம்தத் மற்றும் நவீன் நூலி ஆகியோர் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணியாற்றி இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய கதாபாத்திரமான 'ரயனம்' போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.அதில் ஒரு பிரேமில் கூட விஜய் சேதுபதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது ரயனம் போஸ்டரை வெளியிட்டு டிரைலரில் அவரைப் பார்க்கக் காத்திருங்கள் என மித்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.தமிழில் விஜய் சேதுபதி பல படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து அசத்திக் கொண்டு இருக்கிறார்.ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த விஜய் சேதுபதி, விக்ரம் வேதா படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'. விஜய் சேதுபதி, மாஸ்டரில் பவானி கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தை ரசிக்க வைத்திருக்கிறார். விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி திரையில் தெரிவதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: | trending news | popular news | movie updates | vjs updates | latest news | interesting news | kollywood news | daily updates | recent updates | vijaysethupathi updates | cinema updates | tamil movie updates | trending topics | famous movie updates |