ஜி.வி.பிரகாஷின் தங்கை வெற்றிமாறன் படத்தில் இணைகிறார்!

தனுஷின் 'அசுரன்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து வெற்றிமாறன் சூரியை வைத்து படத்தை இயக்கி வருகின்றார்.அயல்நாட்டில் வேலைக்கு செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை சுற்றி உருவாக இருக்கிறது இத்திரைப்படம்.ஆரம்பத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையை மையமாக வைத்து,இந்தப் படத்தை உருவாக்க எண்ணியிருந்தனர்.அத்திட்டம் கைவிடப்பட்டு, ஜெயமோகனின் "துணைவன்" எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர்.எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது.இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க போகிறார்.

இந்த நிலையில் படத்தின் அப்டேட்டாக கதாநாயகி யார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்ற பாவக்கதைகள் ஆந்தாலஜியில் இடம் பெற்ற தங்கம் குறும்படத்தில் நடித்த ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ. இவர், பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகிய 'க/பெ. ரணசிங்கம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதியின் தங்கை வேடத்தில் நடித்திருந்தார்.



பவானிஸ்ரீ இதற்கு முன்னே ஒரு வெப் சீரிஸில் நடித்து உள்ளார். அமலா அக்கினேனி நடித்த ஹை ப்ரிஸ்ட்ஸ்  என்ற வெப் சீரிஸில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீசையை முறுக்கு படத்தில் நடிகர் ஆதியின் தம்பியாக நடித்த நடிகர் ஆனந்த், இயக்கும் அறிமுக படம் "நண்பன் ஒருவன் வந்த பிறகு" இந்த படத்தில் நாயகனாக ஆர்.ஜே. விஜய் மற்றும் நாயகியாக பவானி ஸ்ரீ ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.  நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது பவானி ஶ்ரீ தனுஷின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.பரியேறும் பெருமாள் இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.இயக்குநர் வெற்றிமாறன் சூரி படத்தை முடித்தவுடன்தான்,சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார்.இந்தப் படம் 'வாடிவாசல்' நாவலைத் தழுவி எடுக்கப்படும் படமாகும் என்பது கூடுதல் தகவலாகும்.



இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: | trending news | popular news | movie updates | gv updates | latest news | interesting news | kollywood news | daily updates | recent updates | tamil movie updates | cinema updates | tamil cinema updates | trending topics | famous cinema news |